மகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு

Jul 27, 2018 ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமோன் மகசேசே விருதுக்கு பரத் வத்வானி, சோனம் வாங்சக் ஆகிய இரு இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசாசே நினைவாக ஆசியா கண்டத்தில் அரசுப்பணி, பொது சேவை, சமூக சேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை பிரிவுகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் ‘மகசாசே’ விருது வழங்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல், மணிலாவில் நேற்று வெளியிடப்பட்டது. 

ஆசியாவின் நோபல் பரிசு என எல்லோராலும் அறியப்படும் இந்த விருதுக்கு 6 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சக் ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த மருத்துவரான பரத் வத்வானி, சாலை ஓரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
    
இதேபோல் சிறப்பான கல்விச் சேவையை வட மாநிலங்களில் விரிவுபடுத்தியதற்காக சோனம் வாங்சக்குக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவரின் கல்விச் சேவையால், அரசாங்கப் பணிகளில் அதிகமானோர் தேர்வாகி உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களைத் தவிர, கம்போடியாவின் யூக் சாங், கிழக்கு தைமூரின் லூர்டெஸ் மார்டின் குரூஸ், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஹோவர்ட் டே, வியட்நாம் நாட்டைச்சேர்ந்த ஹோவாங் யென் ரோம் ஆகியோர் மகசேசே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Current Affairs 2018 pdf free download 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection