திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்


  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறள், உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. 
  • முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 
  • தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. 
  • திருக்குறள் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். 
  • திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 
  • திருக்குறளை போற்றும் பாடல்களின் தொகுப்பு - திருவள்ளுவ மாலை.
  • திருவள்ளுவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்