TNPSC General Tamil - இராமலிங்க அடிகளார்

TNPSC, TET, TRB, RRB Exam Tamil Questions Answers

1) இலிங்கிச் செட்டி தெரு அமைந்துள்ள ஊர்?
சென்னை

2) சென்னை இலிங்கிச் செட்டித் தெருவில் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – என்னும் பாடலை பாடி அதற்கு நெடுநேரம் பொருள் கூறிய ஒன்பது வயது சிறுவன்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்

3) சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டுவர வள்ளலார் அமைத்த பாதை?
சமசர சுத்த சன்மார்க்கப்பாதை

4) எந்த நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்?
பத்தொன்பதாம் நூற்றாண்டு

5) பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்றவர்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்

6) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
மருதூர் – சிதம்பரம் வட்டம் – கடலூர் மாவட்டம்

7) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த தேதி?
05.10.1823

8) வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமைய்யா & சின்னம்மை

9) இராமைய்யா சின்னம்மைக்கு இராமலிங்க அடிகளார் எத்தனையாவது மகவாக பிறந்தார்?
ஐந்தாவது மகவு

10) இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிறித்த குழந்தை?
இராமலிங்க அடிகளார்

11) தில்லை ஆலய அந்தணர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை எவ்வாறு பாராட்டினார்?
இறையருள் பெற்ற திருக்குழந்தை

12) இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறியவர்?
வள்ளலார்

13) அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த – என்று பாடியவர்?
வள்ளலார்

14) இராமலிங்கர் பிறந்து எத்தனையாவது மாதத்தில் தன் தந்தையார் மறைந்தார்?
பிறந்த ஆறாவது திங்களில்

15) இராமலிங்கருக்கு ஐந்து வயதானவுடன், கல்வி கற்க அவரை தம் அண்ணன் யாரிடம் அனுப்பிவைத்தார்?
சபாபதி ஆசிரியர்

16) இராமலிங்க அடிகளார் எத்தனை வயதில் பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்?
ஒன்பது வயதில்

17) திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்?
திகம்பர சாமியார்

18) தெருவில் செல்லும் மனிதர்களை “அதோ ஆடு போகிகிறது, அதோ மாடு போகிகிறது, அதோ நரி போகிறது” என்று அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப விலங்குகளின் பெயர்களால் கூறியவர்?
திகம்பர சாமியார்

19) இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று திகம்பர சாமியார் யாரை கூறினார்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்

20) தருமமிகு சென்னையில் உள்ளா கந்தகோட்டத்து இறைவனை வணங்கி மனமுருகப் பாடியவர்?
இராமலிங்க அடிகளார்

21) இராமலிங்க அடிகளார் சென்னை கந்தகோட்டத்து இறைவனை பாடிய பாடல்களின் தொகுப்பு?
தெய்வமணிமாலை

22) ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் – என்று படியவர்?
இராமலிங்க அடிகளார்

23) உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – என்று பாடியவர்?
இராமலிங்க அடிகளார்

24) கற்போரை மனமுருகச் செய்யும் பாடல்கள் யாருடையது?
இராமலிங்க அடிகளார்

25) திருவொற்றியூர் சிவபெருமான்மீது இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
எழுத்தறியும் பெருமான் மாலை

26) வடிவுடை மாணிக்கமாலை – என்ற நூலின் ஆசிரியர்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்

27) பொதுமை உணர்வுடன் பிற தெய்வங்களின்மீதும் பாடல்களை பாடியவர்?
அருட்பிரகாச வள்ளலார்

28) எளிய இனிய பாடல்கள் மற்றும் கல்லார்க்கும் கற்றவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் கருத்து நிறைந்த பாடல்கள் யாருடையது?
திருவருட் பிரகாச வள்ளலார்

29) மூடநம்பிக்கைகளாலும் சாதி மத வேறுபாடுகளாலும் மக்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் பதைத்தவர்?
திருவருட் பிரகாச வள்ளலார்

30) ஒருமைவாழ்வு, ஒருமையரசு, ஒருமையுலகம் காண விரும்பியவர்?
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

31) ஒருத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளனர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும் – என்று பாடியவர்?
வள்ளலார் இமாலிங்க அடிகள்

32) சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் – என்றவர்?
இராலிங்க அடிகளார்

33) வள்ளலார் அவர்கள் சிறுபிள்ளை விளையாட்டு என்று எதை இகழ்கிறார்?
சாதியையும் மதத்தையும்

34) ஆணும் பெண்ணும் சமம் என்று அன்றே உரைத்தவர்?
இராமலிங்க அடிகளார்

35) மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மைகொண்டு, மனிதநேயத்துடன் வாழவேண்டுமென்றும் மன்பதைக்கு உணர்த்தியவர்?
வள்ளலார்

36) எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி – என்று பாடியவர்?
வள்ளலார்

37) பேரின்ப வீட்டின் திறவுகோல் – எது என்று வள்ளலார் கூறுகிறார்?
உயிரிரக்கம்

38) கடவுளின் பெயரால் உயிர்கொலை செய்தவனை அறவே வெறுத்தவர்?
வள்ளலார்

39) பலிகொள்ளும் சிறுத்தெய்வக் கோயிலைக் கண்டு நடுங்கியவர்?
வள்ளலார்

40) போரில்லா உலகினை படைக்க விழைந்தவர்?
வள்ளலார்

41) மண்ணுலகத்திலே உயிர்கள்படும் வருத்தத்தைக் கண்டும் கேட்டும் வள்ளலார் பாடிய பாடல்?
அப்பாநான் வேண்டுதல்கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்

42) அருட்பெருஞ்ஜோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்கு கருவி எது என வள்ளலார் கூறுகிறார்?
தனிப்பெருங்கருணை

43) சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைக்கப்பட இடம்?
வடலூர்

44) சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் நோக்கம்?
1) சாதி, மத, சமய, இன வேறுபாடு கூடாது
2) எவ்வுயிரையும் கொல்லலாகாது
3) புலால் புசித்தல் கூடாது
4) எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணுதல் வேண்டும்
5) ஏழை மக்களின் பசியை போக்குதல் வேண்டும்
6) உலக மக்கள் அனைவரையும் உடன்பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும்

45) அருட்கருணை நிறைந்த பாடல்கள் யாருடையது?
இராமலிங்க அடிகளார்

46) திருவருட்பா – என்ற நூலின் ஆசிரியர்?
வள்ளலார்

47) திருவருட்பா எத்தனை தொகுதிகளை கொண்ட நூல்?
ஆறு தொகுதிகள்

48) உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தவர்?
வள்ளலார் இராமலிங்கர்

49) உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்ற வடலூரில் வள்ளலார் அமைத்த சபை?
சத்திய ஞானசபை

50) மக்கள் அறியாமை நீங்கி அறிவு ஒளிபெற, அங்கே சோதி தரிசனப் புதுமையைப் புகுத்தியவர்?
வள்ளலார்

51) புதுநெறி கண்ட புலவர் யார்? அவ்வாறு போற்றியவர் யார்?
வள்ளலார் – போற்றியவர் பாரதியார் (சோதி தரிசனப் புதுமையை புகுத்தியதால்)

52) தமிழ் மொழியே இறவாத நிலை தரும் – என்று கருதியவர்?
வள்ளலார்

53) உலகெலாம் உய்ய உயரிய நெறி கண்டவர்?
வள்ளலார்

54) வள்ளலார் இறவாநிலை எய்திய நாள்?
தைப்பூசத் திருநாள் – 1874 ஆம் ஆண்டு

55) வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் யாவை?
1) தாய் தந்தை மொழியைத் தள்ளி நடக்காதே
2) குருவை வணங்கக் கூசி நிற்காதே
3) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
4) மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
5) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே
6) பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
7) ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
8) பசித்தோர் முகத்தை பாராதிராதே
9) இரப்போர்க்குப் பிச்சையில்லை என்னாதே
10) தானம் கொடுப்போரை தடுத்து நிறுத்தாதே

56) வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
1) சிறந்த சொற்பொழிவாளர்
2) போதகாசிரியர்
3) உரையாசிரியர்
4) சித்த மருத்துவர்
5) பசிப்பிணி போக்கிய அருளாளர்
6) பதிப்பாசிரியர்
7) நூலாசிரியர்
8) இதழாசிரியர்
9) இறையன்பர்
10) ஞானாசிரியர்
11) அருளாசிரியர்

57) வள்ளலார் பதுப்பித்த நூல்கள் எவை?
1) சின்மய தீபிகை
2) ஒழிவிலொடுக்கம்
3) தொண்டை மண்டல சதகம்

58) வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள்?
1) மனுமுறை கண்ட வாசகம்
2) ஜீவகாருண்ய ஒழுக்கம்

தொகுப்பு : சேகர் சுபா டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்