TNPSC, TET Exam - New 6th tamil Study Materials

6ஆம் வகுப்பு உரைநடை - சிறகின் ஓசை

பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலையையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தல் வலசை போதல் என்பர். 

நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
உணவு, இருப்பிடம், தட்பவெப்ப நிலை மாற்றம், இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன.

பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன.

பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப்பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன.

சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை, ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து, வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு.

வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
-    தலையில் சிறகு வளர்தல்
-    இறகுகளின் நிறம் மாறுதல்
-    உடலில் கற்றையாக முடி வளர்தல்
ஒருவகைப் பறவையை வேறு வகைப் பறவை என்று கருதும் அளவிற்குக்கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. 

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஅடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் மூலம் பறவைகள் வலசை வந்த செய்தியைப் பற்றி சத்திமுத்தப்புலவர் குறிப்பிடுகிறார்.
இதன் தொடர்ச்சியைக் காண

கருத்துரையிடுக

0 கருத்துகள்