ad

CCSE 4 தேர்வில் நான் எப்படி வெற்றி பெற்றேன் ?

வணக்கம்!


எனது பெயர் S.பிரீத்தி.

2018 CCSE 4 தேர்வில் *மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளேன் (My Reg.No.130401300).

நான் பெற்ற மதிப்பெண் 273/300 (182/200).

தற்போது என்னிடம் பல பேர் கேட்பது உங்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதே. இதற்கு ஒரு சில வரிகளில் என்னால் பதிலளிக்க இயலாது.

எனது அனுபவத்தைக் கூறுகிறேன்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுக்கா, கன்னேரிமுக்கு என்னும் கிராமத்தில் நடுத்தர வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த பெண் நான்.

** 2012 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தேன்.கோவை, தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு எனது இளங்கலை பட்டத்தை முடித்த பின்பு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே ஆறு மாதங்கள் கழித்தேன்.

** என்னுடன் படித்த பல பேர் முதுகலைப் படிப்பிலும் வேலையிலும் சேர்ந்து விட்டனர். நானோ வீட்டிலேயே எனது நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.

** 2016 நவம்பர் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற போது தேர்வுக்கு விண்ணப்பித்தும் நான் எழுதவில்லை. தன்னம்பிக்கையை விட என்னால் வெற்றி பெறமுடியுமா…? என்னும் சந்தேகமே அதிகமாக இருந்தது.

** தேர்வு நடந்து முடிந்ததும் நண்பர்களிடம் கேள்வித்தாளை வாங்கிப் பார்த்தேன். போட்டித் தேர்விற்கு என்று என்னை நான் முழுமையாக தயார் படுத்திக் கொள்ளவில்லை என்று அப்போதுதான் நன்றாகப் புரிந்தது. போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக உணர்ந்தேன்.

** என்னை தயார்படுத்திக் கொள்ள முடியவில்லையென்றாலும் தேர்வில் பங்கு கொள்வதற்கான முயற்சிகளிலாவது ஈடுபட்டிருக்கலாம் என்று பின்னர் தோன்றியது..

** முயற்சியே செய்யாமல் என்னால் வெற்றி பெற முடியாது என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..??!!!

** அன்று முதல், முழு மூச்சாக எனது நேரத்தைத் தேர்விற்க்காக தயார்படுத்திக் கொள்வதில் செலவிட்டேன். பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். 2017 குரூப்-1 ற்க்கான முதல்நிலை (Prelims) தேர்வு நடைபெற்றது.

** தேர்வு எழுதுவதற்கான குறிப்பிட்ட வயது இல்லாத காரணத்தினால் என்னால் எழுத முடியவில்லை.தேர்வு எழுத முடியவில்லை என்பதற்காக எனது முயற்சிகளுக்கு இடைவெளி விடவில்லை.

** அடுத்து குரூப்-2A அறிவிப்பு வெளியானது. 'கொக்கொக்க கூம்பும் பருவத்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்கை மனதில் பதிய வைத்து தேர்வில் வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என படித்தேன்.

** நான் எழுதிய முதல் தேர்விலேயே 164/200 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றது பெருமகிழ்ச்சி.

** ஆனால் மாநில அளவில் மதிப்பெண் பெறாமல் போனதற்கு காரணம் என்னிடம் கடின உழைப்பு (HARD WORK) இருந்ததே தவிர SMART WORK இல்லை.

எப்படிப் படிக்கிறோம் என்பதை விட என்ன படிக்கிறோம் என்பது முக்கியம் என உணர்ந்தேன்.

** அடுத்த CCSE 4 அறிவிப்பு வெளியானது இந்த முறை HARDWORK மற்றும் SMART WORK இரண்டையும் ஈடுபடுத்தினேன். வெற்றிக்கனி எட்டியது.

** நான் எழுதிய முதல் இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்றேன். நான் பெற்ற வெற்றிக்கு கடின உழைப்பே முதற்காரணம் என்றாலும் மாநில அளவில் வெற்றி பெற்றதற்கு SMART WORK-க்கே காரணமாக இருந்தது என்று தான் கூறுவேன்.

நான் கடந்து வந்த பாதையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள்.

1. கொஞ்சம் கூட தன்முனைப்பு கொண்டு முயற்சிக்காமல், நம்மால் இதில் வெற்றி பெற இயலாது என நினைப்பது முட்டாள்தனம்.

2. இலக்கை நிர்ணயித்த பின் நமது கவனத்தை இலக்கை அடைவதற்கான முயற்சியிலேயே செலுத்த வேண்டும். வேறு எங்கும் சிதற விடக் கூடாது.

3. HARD WORK என்பது அடித்தளமாகவும் SMART WORK என்பது அதன் கூரையாகவும் கட்டினால் வெற்றி எனும் கோபுரம் தானாக அமையும்.
நண்பர்களே….!

** நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக உங்களால் வெற்றி பெற முடியும். அதற்கு முதலில் செய்ய வேண்டியது உங்களால் முடியும் என உங்களை நீங்கள் நம்புவது.

** அது உங்களை வெற்றியின் பாதையில் இட்டு செல்லும்.

** ஆம்…! நான் தேர்வு எழுதுவதற்கு முன்பே ஒரு அரசு பணியில் வேலை செய்யும் நபராகவே என்னை நினைத்துக்கொண்டு இருப்பேன்.

** அடிக்கடி என்னிடம் நானே சொல்லிக் கொண்டிருப்பேன். அன்று நினைத்தேன், இன்று நிறைவேறியது.

** இன்று நீங்கள் நினைத்தால் நாளை கண்டிப்பாக உங்களாலும் முடியும்.

** விதைகள் விளைச்சலைத் தருவதற்கு முன்பு பல மழைகளையும், வெயில்களையும் தாங்கிக் கொண்டுதான் இறுதியில் மகசூலைத் தருகிறது.

** தடைகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறிச் செல்லுங்கள். வெற்றி உங்கள் வசப்படும்.

** இடையில் வரும் சிறு தோல்விகளை பெரிதாக நினைத்து விலகி விடாதீர்கள்.

** ஏனெனில் தோல்விகள் என்பது நம் இலக்கிற்கான சரியான பாதையைக் கண்டறிய உதவும் வழிமுறைகள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

*எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தாருக்கும் - நண்பர்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

(மற்றும்)

எனக்கு தூண்டுகோலாக இருந்து வழிகாட்டிய IGRIV IAS ACEDEMY-க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*

நன்றி,
அன்பு சகோதரி ,
S.பிரீத்தி.

Post a Comment

1 Comments