தனித்தேர்வர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவது எப்படி?


பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினை பள்ளியின் மூலம் எழுதாமல் தனியாராக (பிரைவேட்டாக) எழுதியவர்கள் தங்களது தமிழ் வழி சான்றிதழை சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து பெற வேண்டும்.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் உங்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (SSLC Mark Sheet Xerox) / உங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் ஒளிப்பிரதி (HSC Mark Sheet Xerox) மற்றும் உங்கள் மாற்றுச் சான்றிதழின் ஒளிப்பிரதி (TC Xerox) ஆகியவற்றுடன் ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பக் கடிதத்தையும் அனுப்ப வேண்டும்.

10 நாட்களுக்குள் உங்களுக்கான தமிழ் வழி சான்றிதழ் நீங்கள் பகிர்ந்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும்.

நீங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் சான்றிதழ் சரி பார்ப்பு அல்லது கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்தால் அந்த குறிப்பாணையின் ஒளிப்பிரதியையும் ( CV or Counselling Memo) இணைத்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Government Examination,
DPI campus,
College Road,
Nungampakkam,
Chennai - 600 034.

Ph: 044-2827 8286, 044-2822 1734.
email: dgedirector@gmail.com
Web: www.tn.gov.in/dge

சென்னைக்கு அருகில் எனில் நேரிலேயே வந்து கொடுக்கலாம்.

நன்றி.

அன்புள்ள
அஜி, சென்னை
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection