TNPSC Group 2 Exam Notification 2018 - Apply Online for 1199 Group II Posts

பலரது நீண்ட நாள் எதிர்பார்ப்பான Group-2 தேர்வு TNPSC-ஆல் இன்று(10.08.2018) வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.09.2018

தேர்வு நாள் : 11.11.2018 FN

மொத்த பணியிடங்கள் : 1199

கல்வித் தகுதி:
1. பொதுவாக 1120 பதவிகளுக்கு அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் (பொறியியல் பட்டதாரிகள் உட்பட)
2. Industrial Co-Operative Officer &Revenue Assistant க்கு மட்டும் (30+11 பணியிடங்கள்) பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது.


சிறப்பு கல்வித் தகுதி

3. Assistant Section OfficerCum Programmer inTamil Nadu Public Service Commission பதவிக்கு (2 பணியிடங்கள்) M.Sc Computer science படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.
4. Assistant Section Officer in Law Department in Secretariat பதவிக்கு (16 பணியிடங்கள்) B.L படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.
5.Special Assistant in the Vigilance and Anti Corruption பதவிக்கு (2 பணியிடங்கள்) அரசால் நடத்தப்படும் தொழில்நுட்ப பயிற்சியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
6. Assistant Section Officer in FinanceDepartment in Secretariat பதவிக்கு (16 பணியிடங்கள்) M.A,. in Commerce or Economics or Statistics படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

பொதுவாக அனைவரின் தற்போதய கேள்வி புதிய புத்தகத்திலிருந்து வினாக்கள் வருமா ? வராதா?

அதாவது 6 & 9 & 11 வகுப்பு பாடங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
TNPSC - ன் பாடத்திட்டம்(Syllabus) மாற்றப்படவில்லை என சிலர் கூறலாம்.
ஆனால் TNPSC - ன் பாடத்திட்டம் ஒரு சுருக்கப்பட்ட வடிவமே. அதாவது புறநானூறு என்று கொடுக்கப்பட்டால்
அது தொடர்பான செய்திகள் எந்த பாடப்புத்தகத்திலும் இடம் பெறலாம்.
இத்தேர்வில் CCSE-IV & Group 2A & 2016- Grop-IV and Group 2A -ல் வெற்றி பெற்றவர்களும் வெற்றியினை நெருங்கியவர்களும்
நல்லதொரு போட்டியினை கொடுப்பார்கள் என்பது நிதர்சனம்.

படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?

TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்