TNPSC Group 2 பாஸ் பண்ணனுமா ?

  • பசிச்சா எப்டி நம்ம சாப்பாட பத்தி மட்டுமே நினைக்கிறோமோ அத மாதிரி சிந்தனை முழுவதும் குருப் 2 தேர்வில் இருக்க வேண்டும்.
  • பகலில் தூங்கி தூங்கி உங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம்.. காலைல 7 மணிக்கு படிக்க ஆரம்பிச்சா நைட் தூங்குற வரைக்கும் படிப்பு தான்... இடைல கொஞ்சம் கொஞ்சம் பிரேக் தேவைப்படும்.. அப்ப டிவி, பாட்டு, பேஸ்புக், வாட்ஸ் அப் ன்னு கொஞ்சம் ஆசுவாசபடுத்திக்கலாம்.
  • வாட்ஸ் அப் குருப் ..டெலிகிராம் குருப்... வாங்க படிக்கலாம் ன்னு கூப்ட்டு வாங்க பழகலாம் ன்னு உங்க நேரத்தை தான் வீணடிப்பாங்க... கவனம்..... Hi,சாப்டீங்களா ,பல்லு தேச்சீங்களா,வாங்க டிஷ்கஷ் பண்ணுவோம் ன்னு சிலர் உங்கள் நேரத்தை வீணடிப்பர்... இன்னொன்னு டிஸ்கஸ் பண்ணி படிக்கிற அளவுக்கு இது நாசா தேர்வு இல்ல.... நீங்க பாட்டுக்கு உங்க படிப்பை மட்டும் குவியம் செலுத்துங்க...தேவையான குருப்ல மட்டும் இருங்க.
  • ஏற்கனவே நுனி இழையில் மிஸ் பண்றவங்க நிறைய கேள்வித்தாள்கள பயிற்சி செஞ்சி பாருங்க...
  • அடிக்கடி போன் பண்ணி மச்சி படிச்சிடியா ..எப்டி போகுது..அந்த Institute ல என்ன சொன்னங்க.. இங்க என்ன சொன்னாங்க ன்னு கேட்டு கேட்டு உங்கள நீங்களே குழப்பிக்காதீங்க... எதிர்ல உள்ளவன் ரொம்ப தெளிவா ஊமையா இருந்தே பாஸ் பண்ணிட்டு போயிருவான்... பாத்துகோங்க
  • எக்ஸாம் பாஸ் பண்ற வரை உங்க தீபம் அனைய கூடாது.. காத்து மழை புயல் ன்னு அடிக்கும்.. நம்பிக்கை என்னும் திரி வச்சு உழைப்பு என்னும் எண்ணைய ஊத்திட்டே இருங்க....
  • இன்னும் நாள் இருக்கு இன்னும் நாள் இருக்கு ன்னு சோம்பேறித்தனத்துலையே ஊறி போன
    உங்க மூளை சொல்லும்.... ஆழ் மனசுல பாஸ் பண்ணனும் ன்னு மாத்துங்க.. ஆழ் மனசுக்கு அபார சக்தி உண்டு..
  • அப்பபப்ப கடைசி டி என் பி எஸ் சி எக்ஸாம் எழுதிட்டு நம்ம எப்படி வாட்ஸ் அப்லையும் பேஸ்புக் லையும் அழுது புலம்பனோம் ன்னு கண்ணு முன்னாடி கொண்டு வாங்க... தானா படிப்பீங்க.... அதை ஒரு போட்டோ எடுத்து வீட்ல கூட ஒட்டி வைங்க... பாக்கும் போதுலாம் செவுள்ள பளார் பளார் ன்னு அடிச்சு உங்கள படிக்க வைக்கும்...

    By

    V Siva Anantha Krishnan
    Duty Officer
    All India Radio
    Tirunelveli

கருத்துரையிடுக

0 கருத்துகள்