TNPSC Science Study Material | தாவரவியல் - வகைப்பாடு

தாவரங்களின் சிறப்பு பண்புகள்:
  • பச்சையம் உண்டு. அதனால் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது.
  • இவை சுயஜீவி ஊட்டமுறை உடையது.
  • கிளைகள் உடையவை.
  • தாவரங்களின் உடலமைப்பில் வேர், இலை, தண்டு, பூக்கள் போன்ற புறத்தோற்ற அமைப்பு உண்டு.
  • உணர் உறுப்புகள், நரம்பு மண்டலம் இல்லை.
  • கழிவு நீக்க மண்டலம் இல்லை.
  • தண்டு நுனி, வேர் நுனி என்ற வளர் நுனிகளைக் கொண்டவை.
  • தாவரச் செல், செல் சுவரைக் கொண்டது.
  • தாவரச் செல் கணிகங்களைக் கொண்டது. அதில் சில கணிகங்கள் பச்சைய நிறமிகளைக் கொண்டவை.
  • தாவர செல்லின் மையப் பகுதியில் பெரிய வாக்குவோல் இருக்கும்.
  • சென்ட்ரோசோம் கிடையாது.
  • தாவரங்கள் திரவ நிலையில் உணவை எடுத்துக் கொள்ளும். எனவே இது ஹோலோபைடிக் உணவு ஊட்டத்தைக் கொண்டது.
  • தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் தாது உப்புகள்.
  • தாவரங்கள் இடம் விட்டு நகராது.
  • ஆனால், எளிய வகைத் தாவரங்கள் இடம் விட்டு இடம் நகரும். எ.கா. கிளாமிடாமோனஸ்.
  • இனப்பெருக்கமானது, உடல் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பால் இனப்பெருக்கம் வகையைச் சார்ந்தது.
  • வளர்ச்சியானது மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
  • மொனிரா உலகம், புரோட்டிஸ்டா உலகம், பூஞ்சைகள் உலகம், தாவர உலகம், விலங்கு உலகம் என்று உயிரினங்களை வகைப்படுத்தியவர் - விக்டேக்கர்.
  • புரோகேரியோட்டுகள், யூகேரியோட்டுகள் என்று செல் அமைப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

புரோகேரியோட்டுகள்
  • மேம்பாடு அற்ற செல் அமைப்பை பெற்றுள்ளன.
  • நியூக்ளியஸ் உறையும், நியூக்ளியோலசும் காணப்படுவது இல்லை.
  • எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்டிரியன்கள், பசுங்கணிகங்கள் மற்றும் வாக்குவோல்கள் காணப்படுவது இல்லை

 யூகேரியோட்டுகள்
  • மேம்பாடு அடைந்த செல் அமைப்பை கொண்டுள்ளன.
  • சைட்டோபிளாசா  சவ்வினால் சூழப்பட்ட எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்ட்ரியன்கள், பசுங்கணிகங்கள், வாக்குவோல்கள் காணப்படும்.
  • இவை புரோகேரியோட்டுகள் செல்களை விட அளவில் பெரியது.
  • செல்சுவர் பெப்டிடோகிளைக்கன் என்ற மியூக்கோ பெப்டைடால் ஆனது.
  • செல்லுலோஸ் கிடையாது.
  • ரைபோசோம்கள் சிறியன. டி.என்.ஏ. குட்டையானது. மைட்டாஸிஸ், மயோசிஸ் வகை செல் பகுப்புகள் காணப்படுவது இல்லை. மாறாக பிளத்தல் வகை செல் பகுப்பு நடைபெறுகின்றது.
  • கசையிழை ஓர் நுண்ணிழையினால் ஆனது.
  • 5 மைக்ரானை விட பெரிய அளவு செல்களைக் கொண்டவை.
  • செல்சுவர் செல்லுலோஸினால் ஆனது.
 

 
கார்ல் லின்னேயஸ்
  • நவீன தாவரவியலின் தந்தை
  • தாவரங்களுக்கு இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார்.
  • லிஸ்டமாநேச்சுரே, ஜெனீரா ப்ளாண்டாரம், ஸ்பிஸிஸ் ப்ளாண்டாரம் ஆகியவை இவர் எழுதிய நூல்கள்
  • தாவர வகைப்பாடு என்பது தாவரவியலின் ஒரு பிரிவு என்று சொன்னவர்.
வகைப்பாடு
  • செயற்கை வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு - கரோலஸ் லின்னேயஸ் வகைப்பாடு
  • இயற்கை வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு - பெந்தம் - ஹுக்கர் வகைப்பாடு.
  • பரிணாம அடிப்படையிலான வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு- எங்களர், ப்ராண்ட்டல் வகைப்பாடுகள்.
  •  அண்மைக்கால வகைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு - ஆர்தர்க்ராங்க்விஸ்ட் வகைப்பாடு.
  • பெந்தம் ஹுக்கர் ஆகியோரின் வகைப்பாடு ஜெனீரா ப்ளாண்டாரம் எனும் நூலில் வெளியிடப்பட்டது.

வைரஸ்கள்
  • செல்லினுள் மட்டும் வாழும் ஒட்டுண்ணி. இவை உயிருள்ள செல்களில் மட்டும் செயல்படக்கூடியவை.
  • ஒரு முழுமையான வைரஸ் வீரியான் என்று அழைக்கப்படுகிறது.
  • இது கேப்சிட் என்ற புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தைக் கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்