TNPSC Tamil | இணைச்சொற்கள்


8ஆம் வகுப்பு - புதிய தமிழ்ப்புத்தகம் 

அறிந்து பயன்படுத்துவோம்!

தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம் பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.

(எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.

இணைச்சொற்கள் மூன்று வகைப்படும்.  அவை,
1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை


1. நேரிணை:
    ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
    (எ.கா .) சீரும் சிறப்பும், பேரும் புகழும்

2. எதிரிணை:
    எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்.
    (எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு

3. செறியிணை:
பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
    (எ.கா.) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்

8th Tamil Text Book கலைச்சொற்கள்

9th Tamil Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்

மூவகைப் போலிகள்

கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்

புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam

கருத்துரையிடுக

0 கருத்துகள்