தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 1,178 பணியிடங்கள் நிரப்புவதற்கு, தமிழ்நாடு வனத்துறை சீருடை பணியாளர் குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: வனத்துறை அதிகாரி பிரிவில் 300 இடங்களும், வனத்துறை காவலர் பிரிவில் 726 இடங்களும், வனத்துறை காவலர் (ஓட்டுநர் உரிமம்) பிரிவில் 152 இடங்களும் என மொத்தம் 1,178 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி: வனத்துறை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், பி.எஸ்சி., படிப்பில் விவசாயம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வனம், தோட்டக்கலை, கால்நடை அறிவியல், புள்ளியியல் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை முடித்திருக்க வேண்டும். வனத்துறை காவலர் பிரிவுக்கு, பிளஸ் 2 படிப்பில், அறிவியல் பிரிவு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வனத்துறை காவலர் (ஓட்டுநர் உரிமம்) பிரிவுக்கு, பிளஸ் 2 அறிவியல் படிப்புடன், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது: மூன்று பிரிவுக்கும் வயது 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ 250.

கடைசி தேதி: 2018, நவ., 5.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.


விபரங்களுக்கு : www.forests.tn.gov.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்