குருப் இரண்டு தேர்வு – ஓர் பார்வை

நினைவில் கொள்ளவும்...தேர்வில் அதிக பட்ச மதிப்பெண்ணை எடுக்கும் நபர் கட் ஆப் நிர்ணயம் செய்வதில்லை..நிர்ணயிக்கப்பட்ட காலிப்பணியிடங்களில் கடைசியாக வரும் நபரே நிர்ணயம் செய்கிறார். (1199 x 12 = 14388 or 15000)1. மொழித் தாளை பொருத்தவரை பொது தமிழில் 80+ என்பது நல்ல மதிப்பெண். ஏனெனில் மீதி இருபது கேள்விகளில் பங்கு கொண்ட அனைவரும் 20/20 எடுப்பது சாத்தியம் இல்லை.. எனவே கட் ஆப் மதிப்பெண் எடுக்கும் நபர் 80-85 கேள்விகள் வரை சரியாக பதில் அளிக்க வாய்ப்பு உள்ளது...

2. ஆங்கிலத்தை பொருத்தவரை நுணுக்கமான 25 கேள்விகள் கேட்கபட்டுள்ளதால் தமிழை போலவே இங்கேயும் 80+ எடுப்பது என்பது நல்ல மதிப்பெண்..இங்கே அனைவரும் 90+ எடுக்க வாய்ப்பில்லை... 80+ எடுப்பது சாத்தியம்...

3. பொது அறிவை பொருத்தவரை குருப் நான்கு தரத்தில் கேள்விகள் இருந்தாலும் கட் ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் அந்த கடைசி நபர்  நபர் 70+ எடுக்க வாய்ப்பில்லை..ஆனால் 50+ கட்டாயம் எடுக்க வாய்ப்பு உள்ளது...

4. எனவே தோராயமாக 85+60 என்று எடுத்துகொன்டாலும் 145 கேள்விகள் மேல் சரியாக பதில் அளித்து இருந்தாலே அடுத்த மெயின் தேர்வுக்கு படிக்க தயார் ஆகலாம்... படிப்பது வீண் போகாது.. குருப் ஒன்று மெயின் தேர்வுக்கும் பயன்படும்

5. எல்லோரும் சொல்வது போல 150-160 கட் ஆப் என்றால் 15000 பேர் 150-160 கேள்விகள் சரியாக பதில் அளித்து இருக்க வேண்டும்.. இது சாத்தியமா ??? இந்த கேள்விதாளுக்கு சாத்தியம் இல்லை...

6. தேர்வு முடிந்த அன்று 160 கேள்விகள் என்று சொல்வதும் கீ வெளியிட்ட பிறகு அது சடார்  என்று 145 க்கு வந்து நிற்பதும் சகஜம்....உண்மையான நிலவரம் கீ வெளியிட்ட பிறகே தெரியும்...

7. இந்த தேர்வுக்கு அடுத்த மெயின் தேர்வு வர ஆறு மாதங்கள் இடைவெளி இருப்பதால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள்... மெயின் தேர்வு மட்டும் அல்ல குருப் நான்கு மற்றும் குருப் இரண்டு போன்றவை வரவும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம்....

8. 140 க்கு கீழ் எடுத்தவர்கள் உடனடியாக குருப் 1 தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்கலாம்... வேறு வழி இல்லை....

9. காலிப் பணியிடங்கள் ஒரு வேலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது... எனவே  நமக்கு வராது என்று நீங்களே முடிவு செய்து கொண்டு உங்கள் தலை விதியை  நீங்களே எதிர்மறையாக எழுத வேண்டாம்..

10. கட் ஆப் மதிப்பெண் என்பது கேள்விதாலும்/காலிப் பணியிடங்களும்/போட்டியாளர்களும் சேர்ந்து நிர்ணயம் செய்யப்படுவது.. நாம் ஊகிக்கலாமே தவிர உறுதியாக சொல்ல முடியாது... எனவே

இது தான் நடக்க வாய்ப்பு இருக்கிறது
170+ = 100 பேர்
165-170 = 1000 பேர்
160-165 = 2000 பேர்
155-160 = 3000  பேர்
150 – 155 = 4000 பேர்
140-150 = 5000 +பேர்

எனவே கிட்டத்தட்ட 140 கேள்விகளுக்கு மேல் விடை அளித்து இருந்தாலே மெயின் தேர்வுக்கு தயாராகலாம்.... ஏனெனில் 2013 குருப் இரண்டு மெயின் தேர்வுக்கு 135+ எடுதவர்களே மெயின்  தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள்,,,

என் அனுபவத்தின் படி இந்த கேள்வித்தாளில் 140-145  எடுப்பதே பெரிய காரியம்.. எனவே 140 க்கு மேல் இருந்தாலே நேரத்தை வீணடிக்காமல் படிக்க ஆரம்பிக்கவும்....

அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
Transmission Executive
All India Radio
Tirunelveli

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection