தொகைச்சொல்

தொகைச்சொல்லை விரித்து எழுதுக.

தொகைச்சொற்கள் 

    1.     இருதிணை    -    உயர்திணை, அஃறிணை
    2.    இருவினை    -    நல்வினை, தீவினை
    3.    ஈரெச்சம்    -    பெயரெச்சம், வினையெச்சம்
    4.    இருமை    -    இம்மை, மறுமை

    5.    முத்தமிழ்    -    இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
    6.    முக்கனி    -    மா, பலா, வாழை

    7.    முக்காலம்    -    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
    8.    மூவேந்தர்     -    சேரர், சோழர், பாண்டியர்
    9.    முப்படை     -    தரைப்படை, கப்பற்படை, விமானப்படை
    10.    நாற்படை    -    தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை 
    11.    முந்நீர்    -    ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
    12.    மூவிடம்    -    தன்மை, முன்னிலை, படர்க்கை
    13.    நாற்றிசை    -    கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு   
    14.    நாற்பொருள்    -    அறம், பொருள், இன்பம், வீடு

    15.    நானிலம்    -    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
    16.    ஐந்திணை     -    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
    17.    நாற்குணம்     -    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
    18.    ஐம்புலன்    -    பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் (உணர்தல்)
    19.    ஐம்பொறி    -    மெய், வாய், மூக்கு, கண், காது
    20.    ஐந்திலக்கணம்    - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
    21.    ஐம்பால்    -    ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
    22.    அறுசுவை     -    உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு

Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Akash IAS Academy Study Materials 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf 
List of competitive exams in india
ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்