ஆசிரியர் தகுதித்தேர்வு 2019

 
மத்திய அரசுப் பள்ளிகளின் ஆசிரியருக்கான தகுதித் தேர்வை மத்திய அரசு நடத்த உள்ளது. சி.பி.எஸ்.இ. நடத்தும் இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கானது, இரண்டாம் தாள் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கானது. 

தேர்வு எழுதுவதற்கான தகுதிகளாக 1 முதல் 5ம் வகுப்பு வரை 45 சதவீத மதிப்பெண் உடன் பிளஸ் 2, இரண்டு வருட டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதி தேர்வு எழுதுகின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 
6 முதல் 8ம் வகுப்பு வரை 45 சதவீத மதிப்பெண் உடன் பட்டமும், பி.எட், பி.ஏ., பிஎட், பி.எஸ்சி., பிஎட்., தேர்ச்சி பெற்றவர்களும் தகுதியுடையவர்கள். இறுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் தகுதியுடையவர்கள். 
தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வுக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு ரூ.350, இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.600. பொதுப் பிரிவினருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் ஒரு தாளுக்கு ரூ.700. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ. 1,200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பட்டியல் இனத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை உண்டு.

விண்ணப்பிக்க: உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் ஜூலை 19 மாலை 5:00 மணி வரை www.ctet.nic.in என்னும் தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த விவரங்களை இதே தளத்தில் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 5.03.2019
மேலும் விபரங்களை www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க : https://goo.gl/rsKMmR
TNTET Exam Tamil Study Materials & Question Answers
ஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி?
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
பொதுத்தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7


கருத்துரையிடுக

0 கருத்துகள்