யாா்? எது? - போட்டித்தேர்விற்கான வினா விடைகள்


தமிழகம் பஃறுளி, குமரி முதலியன உள்ளடக்கியது என்று கூறும் நூல் - சிலப்பதிகாரம்

“திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் உடுக்க ளோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்த நாங்கள்“ என்று பாடியவர் - பாரதிதாசன்

இந்தியாவில் தமிழ்சங்கத்தை போல் வேறு எங்கும் அமையவில்லை எனக் கூறியவர் - தனிநாயகம் அடிகள்

‘தமிழ்கெழு கடல்’ என்று கூறும் நூல் - புறநானூறு

தமிழ்வேலி என்று கூறும் நூல் - பரிபாடல்

“கூடலில் ஆய்ந்த ஒன்தீந் தமிழின்’’ என்று கூறும் நூல் - மணிவாசகம் (திருவாசகம்)

ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கூறும் நூல்கள் - பட்டினப்பாலை,மதுரைக்காஞ்சி

இசை மரபுகளை வெளிப்படுத்தும் நூல்கள் - தொல்காப்பியம்,சிலப்பதிகாரம்

நரம்பின்மறை என்று கூறியவர் - தொல்காப்பியர்

"பண்ணொடு தமிழொப்பாய்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் - தேவாரம்

குழலினுது, யாழினிது என்று கூறும் நூல் - திருக்குறள்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று கூறும் நூல்கள் - மணிமேகலை, புறநானூறு

களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே என்று கூறும் நூல் - புறநானூறு

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்