இந்திய அரசியலமைப்பு | குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் சின்னம்
இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.

குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.

குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.

மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது.
இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைச் சார்ந்த நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் அமைந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.
பிரதமர்
பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவர்
லோக்சபாவில் பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியால் தேர்ந்தேடுக்கப்படுபவரை குடியரசுத்தலைவர் பிரதமராக நியமிக்கிறார்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும்.

அமைச்சரவையின் தலைவர் பிரதமர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குடியரசுத்தலைவரின் பெயரில் இவரே கவனிக்கிறார்.

நாட்டின் முக்கிய நிர்வாக முடிவுகளை அவ்வப்போது குடியரசுத்தலைவருக்கு தெரிவிப்பது, அமைச்சர்களுக்க்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது, கேபினெட் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது, திட்டக்குழுவிற்கு தலைமை வகிப்பது ஆகியவை பிரதமரின் முக்கிய பணிகள்.

குடியரசுத் தலைவர் பற்றி சில முக்கிய தகவல்கள் 

Constitution of India Part | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | Indian Constitution in tamil
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?

இந்திய அரசியலமைப்பு -
Indian Constitution
இந்திய அரசியலமைப்பு பகுதி | மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்
பொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன?
குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்