இந்திய அரசியலமைப்பு | பாராளுமன்றம்

பாராளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது.


மக்களவை (லோக் சபா)

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.

மக்களவையின்  பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .


மாநிலங்களவை (ராஜ்ய சபா)

மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை  250 மறைமுக தேர்தல் மூலம்  238  உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.

ராஜ்ய சபா உறுப்பினர்களின்  பதவிக்காலம் ஆறு வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே 13 அன்று நடந்தது

Indian Constitution Model Question Answer - Model Test Paper

கருத்துரையிடுக

0 கருத்துகள்