அரசு பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு - 2019

அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகள், நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில், கணினி ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 கணினி ஆசிரியர் பதவிக்கான கல்வி தகுதி, இளநிலை படிப்பில் இருந்து, முதுநிலை படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புடன், பி.எட்., படித்தால் மட்டுமே, கணினி ஆசிரியர் பணியில் சேர முடியும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், தற்போது காலியாக உள்ள, 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை, போட்டி தேர்வு வழியாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிக்கை வெளியிட்டது. தேர்வுக்கான பாட திட்டம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. கணினி அறிவியல், 130; பொது அறிவு, 10; கல்வி உளவியல், 10 மதிப்பெண் என, வினாத்தாள் இடம் பெறும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்