யாப்பிலக்கணம்

  • கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணமே யாப்பிலக்கணம்.
  • செய்யுள்கள் பற்றியும் அவற்றின் உறுப்புகள் பற்றியும் விரிவாகப் பேசுவது யாப்பிலக்கணம் ஆகும்.
  • உறுப்பியலில் யாப்பின் ஆறு உறுப்புகளாக விளக்கப்படுபவை :
    எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.

எழுத்து
  • யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் மூவகைப்படும். அவை  - குறில், நெடில், ஒற்று.
  • எழுத்துகளால் ஆனது `அசை’ எனப்படும்.
அசை
  • ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். 
  • அசை இருவகைப்படும்.
    1) நேரசை  2) நிரையசை
  •  அசைப் பிரிப்பில் ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை
சீர்
  • ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் கூட்டம் சீர் ஆகும்.
  • பாடலின் ஓசைக்கு அடிப்படையாய் அமைவது சீர் ஆகும்.
  •  சீர் நான்கு வகைப்படும். அவை
        1) ஓரசைச்சீர்      2) ஈரசைச்சீர்
        3) மூவசைச்சீர்      4) நாலசைச்சீர்
  • ஈரசைச் சீர்களுக்கு `இயற்சீர்’ `ஆசிரிய உரிச்சீர்’ என்னும் வேறு பெயர்களும் உண்டு.
  • காய்ச்சீர்கள் `வெண்சீர்கள்’ என அழைக்கப்படுகின்றன.
  • வெண்பாவில் இயற்சீரும், வெண்சீரும் மட்டுமே வரும். பிற சீர்கள் வாரா. தளைகளில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும். பிற தளைகள் வாரா.

கருத்துரையிடுக

0 கருத்துகள்