'திருநங்கை' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்

 
'திருநங்கை' என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்.

பல போராட்டங்களுக்குப் பிறகு பல ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் பெற்ற முதல் திருநங்கை. அதனால் மற்ற திருநங்கைகளுக்கு எந்தவித சிரமமும் இன்றி பாஸ்போர்ட் கிடைக்க வழி வகுத்துத் தந்தவர்.

முனைவர்' பட்டம் பெற்ற முதல் திருநங்கை.
தமிழக அரசின் 'கலைமாமணி' பட்டம் பெற்றிருக்கும் முதல் திருநங்கை. 

தமிழிசை நடனத்தில் பிரபலமாகி 'நாயகி' 'பாவத்திற்கு' இலக்கணமும் இலக்கியமுமாகி பரத நாட்டியத்தில் தனது பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருது பெற்ற முதல் திருநங்கை.
 வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க வெளிநாட்டவர்களால் நிர்வகிப்படும் கலை கலாசார அமைப்புகளின் அழைப்புகளின் பேரில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வரும் முதல் திருநங்கை.... என்று பல "முதல்'களை தன்னகத்தே கொண்டிருக்கும் நர்த்தகியின் சொந்த ஊர் மதுரை, அனுப்பானடி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தமிழக அரசின் பதினொன்றாம் வகுப்பிற்கான தமிழ்ப் பாடப் புத்தகத்தில் நர்த்தகி நடராஜ் வாழ்க்கை பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. நடன இசைக் கலைஞர்களின் வாழ்க்கை பாடமாக வைப்பது இதுதான் முதல் முறை.

திருநங்கை திருநம்பிகளை கிட்டத்தட்ட அனைவருமே தாழ்வான கோணத்தில் பார்க்கும்போது, திருநங்கையாலும் சாதிக்க முடியும்.. பலர் போற்ற வாழமுடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் நர்த்தகி நடராஜ்.

தான் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்ததாக இருந்தாலும் அவற்றை முல்லைப்பூ விரிப்பாக மாற்றியவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்