சாலை இளந்திரையன்


இயற்பெயர்: வ.இரா.மகாலிங்கம்.

பெற்றோர்: வ.இராமையா-சின்னலட்சுமி

பிறந்த இடம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாலைநயினார் பள்ளிவாசல்

திராவிட இயக்கக் கருத்தியலுக்கு  ஆட்பட்டிருந்த இவர் அவ்வியக்க மரபின்படி தனக்கென ஒரு புனைப்பெயரை வைத்துக்கொள்ள விழைந்தார். ஆகவே சங்ககால மன்னனான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக்கொண்டு இரா. இளந்திரையன் என்னும் பெயரில் படைப்புகளை ஆக்கினார்.

பின்னாளில் தன்னுடைய ஊர்பெயரின் முதற்பகுதி தனது புனைப்பெயருக்கு முன்னே இணைத்து சாலை இளந்திரையன் ஆனார்.


1957-இல் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர தகவல், ஒலிபரப்புத் துறைத் தலைவரானார்.

1959ம் ஆண்டில் தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்துறை தொடங்கப்பட்டதும் சாலை இளந்திரையன் அத்துறையில் விரிவுரையளராகப் பணியேற்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே 1972ம் ஆண்டில் பேருரையாளராகவும் (Reader) 1983ம் ஆண்டில் பேராசிரியராகவும் (Professor) பதவி உயர்வுபெற்றார். 1985ல் விருப்ப ஒய்வுபெற்று தமிழகம் திரும்பினார்.

தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட சுடர் என்னும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

சிறப்புப் பெயர்கள்:

எழுச்சிச் சான்றோர்
திருப்புமுனை சிந்தனையாளர்
மற்றப் பெயர்கள்:
பிள்ளைப்பாண்டியன்
காஞ்சித்தலைவன்
களக்காடு சா.பெரியபெருமாள்
வீதியூர் நீக்கிழார்

 படைப்புகள்:
அன்னை நீ ஆடவேண்டும் (கவிதை)
சிலம்பின் சிறுநகை
காலநதி தீரத்திலே
பூத்தது மானுடம்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
தமிழ் தந்த பெண்கள்
வீறுகள் ஆயிரம்
கட்டுரைகள்
உலகம் ஒரு குடும்பம்
இரண்டு குரல்கள்   
தமிழ்கனி
தமிழனே தலைவன்

திறனாய்வுகள்
:
நேயப்பாட்டு
சமுதாய நோக்கு
புரட்சிக்கவிஞரின் கவிதை வளம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்