வேலுநாச்சியார் - Velu Nachiyar

6ஆம் வகுப்பு புதிய தமிழ்ப்பாடப் புத்தகத்திலிருந்து 
TNPSC, TET, PGTRB, POLICE ஆகிய போட்டித்தேர்வுகளுக்காக 
முக்கியக் குறிப்புகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
 

இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.

வேலுநாச்சியார் கற்றிருந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது.
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து கொண்டார்.

காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயர் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார் வேலுநாச்சியார்.

வேலுநாச்சியாரின் அமைச்சர் தாண்டவராயர். தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது.

எட்டு ஆண்டுகளுக்கு பின் மைசூர் மன்னர் ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரைப்படையுடன்  சிவகங்கையை மீட்க புறப்பட்டார் வேலுநாச்சியார்.

ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர்.

வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்ததால் கொல்லப்பட்ட பெண்: உடையாள்

குயிலி தம் உடலில் தீ வைத்துக்கொண்டு சிவகங்கைக்கோட்டை ஆயுதக் கிடங்கில் குதித்தார். தம் உயிரைத்தந்து நாட்டை மீட்டுக் கொடுத்தார் குயிலி. 

வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது.

வேலுநாச்சியாரின் காலம் : 1730-1796

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டஆண்டு 1780

ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலுநாச்சியார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்