TNPSC, TET, PGTRB, POLICE ஆகிய போட்டித்தேர்வுகளுக்காக
6ஆம் வகுப்பு புதிய தமிழ்ப்பாடப் புத்தகத்திலிருந்து தொகுத்து வழங்கப்பட்டுள்ள முக்கியக் குறிப்புகள்

1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகள் புகைவண்டியில் மதுரைக்கு சென்றபோது வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.
1937ஆம் ஆண்டு சென்னையில் காந்தியடிகள் தலைமையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்த உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள், “இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார்.

(காந்தியடிகளின் தமிழ்க் கையெழுத்து)
0 கருத்துகள்