நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

TNPSC Group-4, VAO, Group-2, Group-2A, Group-I,  
TNTET, TN Police SI, PC Exam Science Study Notes

உடற்செயலியல் நிகழ்வுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும்.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வளர்ச்சி, இனப்பெருக்கம், வாழ்வைத் தொடர்ந்து பேணுதல் முதலிய இயற்செயல்களைக் கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் செய்கிறது. நாளமில்லாச் சுரப்பு மண்டலம் நாளமில்லாச் சுரப்பிகளையும் அவற்றின் ஹார்மோன்களையும் உள்ளடக்கியது ஆகும்.
எண்டோகிரைன் சுரப்பிகள் எனப்படும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தில் உள்ள சுரப்பிகளுக்கும் நாளங்கள் இல்லை. அவை சுரக்கும் பொருள்களுக்கு ஹார்மோன்கள் என்று பெயர். ஹார்மோன்கள் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து செயலாற்றும் இடங்களுக்கு இரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிப் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. மனிதரில் நாளமில்லாச் சுரப்பிகள் காணப்படும் பகுதிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

தலை
அ) பிட்யூட்டரி சுரப்பி
ஆ) பினியல் சுரப்பி
கழுத்து        
அ) தைராய்டு சுரப்பி
ஆ) பாராதைராய்டு சுரப்பி

மார்பு            
அ) தைமஸ் சுரப்பி

வயிற்றுப்பகுதி        
அ)  கணையம் - லாங்கர் ஹான் திட்டுக்கள்
ஆ) அட்ரீனல் சுரப்பி - அட்ரீனல் கார்டெக்ஸ், அட்ரீனல் மெடுல்லா
இ) இனப்பெருக்கச் சுரப்பிகள் - ஆண்களில் விந்தகம், பெண்களில் அண்டச் சுரப்பி

ஹார்மோன்கள்:
    வேதியியல் அடிப்படையில் ஹார்மோன்கள் புரதங்களாகவோ அல்லது ஸ்டீராடீய்களாகவோ உள்ளன. ஹார்மோன்கள் மிகக்குறைந்த அளவே சுரந்தாலும் செயல் திறனுள்ளவையாக உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பி:
    பட்டாணி அளவே உள்ள பிட்யூட்டரி சுரப்பி மூளையின் ஹைப்போதலாமஸோடு இணைந்துள்ளது. நாளமில்லாச் சுரப்பிகளைப் பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துவதால், நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என இதை அழைக்கலாம்.
பிட்யூட்டரி சுரப்பியின் கதுப்புகள்:
    பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பாக, அடினோஹைபோபைசிஸ் மற்றும் பின் கதுப்பாக நியூரோஹைபோபைசிஸ் அமைந்துள்ளன.

தைராய்டு சுரப்பி :
    கழுத்துப் பகுதியில் குரல்வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உடைய அமைப்பே தைராய்டு சுரப்பி ஆகும். இது தைராக்ஸின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இதில் டைரோசினும் (அமினோ அமிலம்), அயோடினும் உள்ளன.
தைராக்ஸினின் பணிகள்
  • வளர்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
  • உடலின் வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுகிறது.
  • திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைதலை ஊக்குவிக்கிறது.
  • உடல் வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிப்பதால் இஃது ஆளுமை ஹார்மோன் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இரத்தத்தில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.
  • சிறுநீரகச் செயல்பாட்டையும், சிறுநீர்ப் போக்கையும் கட்டுப்படுத்துகிறது.
    Download pdf download 

கருத்துரையிடுக

0 கருத்துகள்