எங்கள் தமிழ் - நாமக்கல் கவிஞர்

7ஆம் வகுப்பு புதிய தமிழ் பாடபுத்தகம் 
 7th New Tamil Book (2019) Study Notes for 
TNPSC, TET, Police & All Competitive Exams
 

எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்
         அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
         போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்
         கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
         என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்
         அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
         எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்.

                  - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.

மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்