Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

மத்திய அரசு - இந்திய நீதித்துறை

நீதித்துறை:-

மத்திய, மாநில அரசுகளின் சட்டம் மற்றும் நிருவாகப் பிரிவுகளின் தலையீடுகளில்லாமல் சுதந்திரமாக இயங்குவது – நீதித்துறை.

நாடு முழுவதும் பல அடுக்குகளில் நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே அமைப்பின்கீழ் செயல்படுவது – ஒருங்கிணைக்கப்பட்ட நீதிமன்றம் எனப்படும்.

குடிமக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது – நீதித்துறை

அரசியலமைப்பு விதிகளை விளக்குவது, நிர்வாக, சட்டமன்றத் தலையீடுகளிலிருந்து அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுவது – நீதித்துறை.

உச்ச நீதிமன்றம்:-


1950-ஆம் ஆண்டு இ.அ.அ.சட்டம் நடைமுறைக்கு வந்தபோது உச்சநீதி மன்றத்தில் 1 தலைமை நீதிபதி + 8 நீதிபதிகள் இடம்பெற்றிருந்தனர்.

தற்போது = 1 தலைமை நீதிபதி + 30 நீதிபதிகள், 1+30=31

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் – குடியரசுத் தலைவர்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் மற்ற நீதிபதிகளையும் நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்.

பெரும்பாலும் நீதிபதிகளை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.
தற்காலிக அடிப்படையில் சில நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு அரசியலமைப்பில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
உயர் நீதிமன்றத்தில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், பிற நீதிபதிகளும் – 65 வயது வரை பதவி வகிக்கலாம்.

பதவிக்காலம் முடிவதற்குள் விலகல் கடிதம் குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்.

பாராளுமன்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் பதவி நீக்கலாம்.

உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் – டெல்லி.

இந்தியாவில் வேறு எந்த ஒரு பகுதியிலும் அமர்வுகளை (பென்ச்) நடத்த முடிவு எடுக்கும் அதிகாரம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல் + தலைமை நீதிபதி ஒப்புதல்.

முதல்நிலை விசாரணை மற்றும் மேல்முறையீட்டு அதிகாரம் ஆகியவற்றை பெற்று திகழ்கிறது.

உச்ச நீதிமண்ரத்திற்கு நேரடியாக முதன்முதலாக கொண்டுவரப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை “முதல் விசாரணை அதிகாரங்கள்” என்று அழைக்கிறோம்.

மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான சிக்கல்கள் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக எடுத்துக்கொள்ளும்.

அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சிக்கல்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் உள்ளன.

அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தால் நீதிப்பேராணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.


அவை:-

ஆட்கொணர்வு நீதிப்பேராணை. (ஹேபியஸ் கார்பஸ்)

செயலுறுத்தும் நீதிப்பேராணை. (மாண்டமஸ்)

தடையுறுத்தும் நீதிப்பேராணை.

ஆவனக்கேட்ப்பு நீதிப்பேராணை.

தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை. (கோ வாரண்டோ)

ஐந்து நீதிப்பேராணைகள் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாப்பது – ஆட்கொணர் நீதிப்பேராணை.

சட்ட உதவி அளித்து, பொதுப்பணியின் சேவை கிடைக்கச் செய்வது – செயலுற்றுத்தும் நீதிப்பேராணை.

துணை நீதிமன்றங்கள் வரம்புமீறி செயல்படுவதைத் தடை செய்வது – தடையுருத்தும் நீதிப்பேராணை.

பொதுப் பதவிகளை ஆக்கிரமிப்பு செய்வதைத் தடை செய்வது – தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை.

சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

அதற்கு உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை.

பல அடுக்குகளில் சங்கிலித் தொடர்போல அமைந்துள்ள துறை – நீதித்துறை.

தற்போது இந்தியாவில் 24 உயர் நீதிமன்றங்கள் உள்ளன.

சில உயர் நீதிமன்றங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட மாநிலங்கலின் யூனியன் பிரதேசங்களின் வழக்குகளை எடுத்துக்கொள்ளும்.

உயர் நீதிமன்றத்திற்கு கீழே பலவிதமான சார்பு நீதிமன்றாங்கள் உள்ளன.

இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.

விரைவாகவும் குறைந்த செலவிலும் நீதி கிடைப்பதற்குக் குறிப்பாக ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு – லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1987-ல் சட்டப்பணிகள் ஆணையச் சட்டத்தின்படி லோக் அதாலத் ஏற்படுத்தப்பட்டன.

நீண்டகாலம் தேங்கி இருக்கும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது – லோக் அதாலத்.

லோக் அதாலத் மூலம் மக்கள் தங்களின் பணம், நேரம், சக்தியைப் பாதுகாக்கலாம்.

குற்றவியல் வழக்குகளைத் தவிர, மற்ற அனைத்து வழக்குகளுக்கும் லோக் அதாலத் மூலம் தீர்வு காணலாம்.

லோக் அதாலத் = விரைவு நீதிமன்றம்.

அரசியல் சட்டப் பிரச்சனை தொடர்பாகக் குடியரசுத் தலைவர் விளக்கம் பெற விரும்பினால், அத்தகைய ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு – உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது.
- சேகர் சுபா டி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி