சந்திராயன் - I

சந்திராயன் I நிலவுப்பயணத்திற்கான ஒரு கலன். இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி ஆகும். 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ISRO-ஆல் விண்ணில் ஏவப்பட்டது. 
இது 2009- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை செயல்பட்டது. இதன் ஆய்வு வலம் வரு மற்றும் தரையிறங்கு வகைகளை உள்ளடக்கியது. இது ISRO-வின் ஐந்து பயன் சுமைகளை எடுத்துச்சென்றது. மேலும், இது அமெரிக்காவின் NASA  விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளிமையம் (ESA),  பல்கேரிய விண்வெளிமையம் இவற்றின் 6 பயன்சுமைகளையும் இலவசமாக எடுத்துச்சென்றது.


சந்திராயன் 312 நாட்கள் விண்ணில் செயல்பட்டது. அப்போது திட்டமிடப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை நிறைவு செய்தது.
பின்வருவன அதன் சாதனைகளில் சில
  1. நிலவின் மண்ணில் நீர் மூலுக்கூறுகள் அதிக பரப்பில் பரவியிருப்பதைக் கண்டறிந்தது.
  2. சந்திராயனின் கனிம வரை கருவி (Moon minerology Mapper), நிலவு முற்காலத்தில் முற்றிலும் உருகிய நிலையிலிருந்ததை உறுதி செய்கிறது.
  3. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் பயன்சுமை - சந்திராயன் I படமாக்கும் X-கதிர் (CXIS)  நிறமாலைமானி, 24க்கும் மேற்பட்ட வலிமை குன்றிய சூரிய ஒளிப்புயல்களைப் பதிவு செய்தது.
  4. சந்திராயன் I-ல் பொருத்தப்பட்ட நில வரைபட ஒளிப்படக்கருவி அமெரிக்காவின் அப்போலோ 15, அப்போலோ 11 நிலவுக்கலன்கள் நிலவில் தரையிறங்கிய இடங்களைப் பதிவு செய்துள்ளது.
  5. நிலவின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர் பகுதிறன் நிறமாலைமானி மூலம் பெறப்பட்டது.
  6. நிலவின் லேசர் தொலைவறியும் கருவி (LLRI),  நிலவின் துருவங்கள் மற்றும் முக்கிய பகுதிகள் பற்றிய தகவல்களை அளித்தது.
  7. CXIS X-கதிர் படக்கருவி, நிலவில் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இவற்றின் தடையங்களைப் பதிவு செய்துள்ளது.
  8. பல்கேரியன் பயன்சுமையான கதிர் வீச்சுக் கண்காணிப்புக் கருவி (Radiation Dose Monitor - RADOM)  சந்திராயன் ஏவப்பட்ட நாளிலேயே செயல்படுத்தப்பட்டு இறுதிநாள் வரை செயல்பட்டது.
  9. 75 நாட்களில் சந்திராயன் புகைப்படக் கருவி 40,000க்கும் மேற்பட்ட படங்களைப் புவிக்கு அனுப்பியது.
  10. நிலவின் மேடு பள்ளங்களை நில வரைபட ஒளிப்படக்கருவி பதிவு செய்தது. நிலப்பரப்பு அதிக பள்ளத்தாக்குகளைக் கொண்டது.
  11. புவியின் முழு வடிவத்தையும் முதன்முறையாக பதிவு செய்து அனுப்பியது.
  12. சந்திராயன் I நிலவுப்பரப்பில் மனிதர்களின் உறைவிடமாகப் பயன்படும் பல குகைகளைக் கண்டறிந்தது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்