PG TRB ONLINE EXAM 2019
HALL TICKET AND REVISED TIME TABLE PUBLISHED
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு
2018-2019ம் ஆண்டிற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 க்கான கணினி வழித் தேர்வு 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 தேதிகளில் (காலை / மாலை) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கு உரிய அனுமதி சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி
www.trb.tn.nic.in -ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் (Reporting Time) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் (Original Identity Card) விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் (Original passport size Photograph) தவறாமல் எடுத்து வர வேண்டும்.
தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது.
மேற்படி கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சி தேர்வு (Practice Test / Mock Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் (Login ID and Password) பயன்படுத்தி www.trb.tn.nic.in -ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக