தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாநகராட்சிகள் இருக்கின்றன?


மாநகராட்சிகள்

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழகத்தில் 2019ம் ஆண்டு நிலவரப்படி 15 மாநகராட்சிகள் உள்ளன. 

1.  சென்னை (1688)
2.  மதுரை (1971)
3.  கோயம்புத்தூர் (1981)
4.  திருச்சிராப்பள்ளி (1994)
5.  சேலம் (1994)
6.  திருநெல்வேலி (1994)
7.  ஈரோடு (2008)
8.  தூத்துக்குடி (2008)
9.  திருப்பூர் (2008)
10. வேலூர் (2008)
11. திண்டுக்கல் (2014)
12. தஞ்சாவூர் (2014)
13. நாகர்கோயில் (2019)
14. ஓசூர் 2019)
15. ஆவடி (2019)

இந்த மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அல்லது இதற்கு தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து மாநகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவ்வாரே மாநகர்மன்ற தலைவரும்(மேயர்) நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார்.

இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மாமன்றத்துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவர் மாநகராட்சி மன்றத்துணைத் தலைவராகப் பதவியேற்கின்றார்.

மாநகர மேயருக்கு அடுத்தபடியாக மாமன்றத் துணைத் தலைவர் செயல்படுவார். மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்