கிராம ஊராட்சி செயலர் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு.

மாவட்ட நிர்வாகம் மூலம் பணியமர்த்தப்படும் இந்த பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


1.7.2019 தேதியின் படி, 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு மேற்படாதவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப்பகுதிக்குள் வசிக்க வேண்டும் அல்லது அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், அந்தந்த கிராம ஊராட்சி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, நோ்முகத் தோ்வுக்கான அழைப்புக் கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் தகவல்களுக்கு உங்கள் மாவட்டங்களில் கிளிக் செய்க :

திருவண்ணாமலை
மதுரை
நாமக்கல்
தேனி
வேலூர்
காஞ்சிபுரம்

கரூர்
நாகை
பெரம்பலூர்
ஈரோடு
கிருஷ்ணகிரி
நாமக்கல்
சேலம்
திருப்பூர்

திண்டுக்கல்
ராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
கடலூர்
விழுப்புரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்