இந்து அறநிலைத்துறை தேர்விற்கான வினா விடைகள் | இந்து மத இணைப்பு விளக்கம்

இந்து அறநிலைத்துறை தேர்விற்கான வினா விடைகள்

1. சிற்றின்பம் என்பது எது?
உலகபொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் சிற்றின்பம் எனப்படும்.

2. பேரின்பம் என்பது என்ன?
என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கதக்க இன்பம் பேரின்பமாகும்.


3. மதம் என்றால் என்ன?
பேரின்பத்தை மக்கள் அனுபவிக்கப் பெரியோர்கள் இறைவன் அருளோடு வகுத்த வழியே மதமாகும்.

4. வழிபட்டு வரும் கடவுள் பெயரால் அமைந்துள்ள மதங்கள் எவை?
சைவம் , வைணவம்

5. மதங்கள் நிறுவியவர் பெயரால் உள்ள மதங்கள் எவை?
பௌத்தம், ஜைனம்
6. தலைசிறந்த நூலின் பெயரால் அமைந்த மதங்கள் எவை?
வேதாந்தம், ஸ்மார்த்தம்

7. ஆரியர்கள் சிந்துநதி தீரத்தில் வசித்து வந்தபோது அவர்களை பாரசீகரும், கிரேக்கரும் எவ்வாறு அழைத்தனர்?
சிந்துக்கள் அல்லது இந்துக்கள்

8. சிந்துக்களுடைய மதமே இந்து மதம் என ஆயிற்று என்று யார் கூறினர்?
சில சரித்திர ஆசிரியர்கள்

9. இந்திய நாட்டின் மதம் எது?
இந்து மதம்

10. இந்து மதம் என்னும் பெயர் எதனை மேற்கொண்டு வந்ததாகும்?
இந்து மதத்தின் கொள்கையை மேற்கொண்டு வந்ததாகும்.

11. இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?
ஹிம்+து
(ஹிம்=ஹிம்சையில் து=துய்க்கின்றவன்)
12. இந்து என்பவன் யார்?
ஓர் உயிர் வருந்தும் போது, அதற்காக வருந்தி அத்துன்பம் அகற்ற முயற்சி செய்பவன் இந்து ஆவான்.

13. இரக்ககுணம் கொண்டு பிறர் துன்பம் அகற்ற முயலும் மக்களைக் கொண்ட மதம் எது?
இந்து மதம்.

14. இந்து மதம் பற்றி சுருதி வாக்கியத்தால் எவ்வாறு அறியலாம்?
ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ: ஹிந்து:
இத்யபி தீயதே

15. இந்து மதம் என்பதற்கு என்ன பொருள்?
அன்பு மதம்

16. அஹிம்ஸா பரமோதர்ம மேலான அறண் எனப்படுவது எது?
அஹிம்ஸை

17. அன்பிற்கு அடிப்படை எது?
அஹிம்ஸை

18. எல்லா உயிர்ப் பிராணிகளுடைய உடம்பையே கோயிலாகக் கொண்டிருப்பவன் யார்?
இறைவன்

இந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைப் புத்தகம்

TNPSC Group-VIIB & Group VIII Exam
இந்து அறநிலைத்துறை தேர்விற்கான வினா விடைகள் அடங்கிய
தொகுப்பினை பதிவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்