மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு!


ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு!



டில்லியில் உள்ள NCT எனும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள கன்சல்டன்ட், அக்கவுண்டன்ட், ப்ராஜெக்ட் அசோசியட்ஸ், செக்ரேட்டிரியல் அசிஸ்டென்ட், அலுவலக மேலாளர், தொகுதி ஒருங்கிணைப்பாளர், தொகுதி திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதில், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு அதிகபட்சமாக 84 பணியிடங்களும், தொகுதி திட்ட உதவியாளர் பணிக்கு 76 இடங்களும் என மொத்தம் 187 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டில்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: கன்சல்டன்ட் - 55, அக்கவுண்டன்ட், செக்ரேட்டரியல் அசிஸ்டென்ட் - 28, ஆபீஸ் மெசேஞ்சர் - 27 என்ற வகையில் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துப் பணிகளுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். 

மேற்கண்ட பணியினுடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cams.wcddel.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்