புவி அமைப்பு மற்றும் நில நகர்வுகள்

நாம் வாழும் பூமியானது தாய்கோளம் என அழைக்கப்படுகிறது.

பூமி மற்றும் மற்ற கோள்களின் தோற்றம் பற்றி பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory) பல வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.


10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காஸ்மிக் வெடிப்பு நிகழ்ந்து, இந்நிகழ்வே பெரு வெடிப்புக் கொள்கை ஆகும்.


பேரண்டம் விரிவடைந்து கொண்டுவருவதை அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் எட்வின் ஹபிள் விளக்கியுளார். மேலும் காலம் செல்ல செல்ல அண்டங்கள் ஒன்றையொன்று விலகிச்செல்கின்றது என்றும் கூறியுள்ளார். 


30-5-2010 அன்று லார்ஜ் ஹெட்ரான் கொலாஸ்டர் என்ற கருவியை உருவாக்கி பெருவெடிப்பு கொள்கையை அறிவியல் அறிஞர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்

சில மில்லியன் ஆண்களுக்கு முன்பு தற்போதுள்ள அனைத்து கண்டங்களும் தென் துருவத்தில் ஒன்றிணைந்து இருந்தது. இப்பெரிய நிலப்பரப்பு பான்ஜியா (எல்லா நிலமும்-கிரேக்க சொல்) என்று அழைக்கப்பட்டது.


இந்நிலப்பரப்பை சுற்றி இருந்த பேராழியை பெந்தலாசா (அ) பிரமாண்டமான பேராழி என்று அழைக்கப்பட்டது. பெந்தலாசா என்ற கிரேக்க சொல்லின் பொருள் எல்லா நீரும்.


பின்னர் பான்ஜியா ஏழு பெரிய தட்டுக்களாகவும், பல சிறிய தட்டுக்களாகவும்  உடைந்தது. இவ்வாறு உடைந்த தட்டுக்களே நிலக்கோள் தட்டுக்கள் என அறியப்படுகின்றன. நிலக்கோள் தட்டுக்களில் மிகப்பெரியது பசிபிக் தட்டு


இந்தோ-ஆஸ்திரேலியன் தட்டு சுமார் 67 மில்லி மீட்டர் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் நகருகிறது. இதனால் இமயமலை ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லி மீட்டர் அளவிற்கு உயருகிறது.


பூமியின் உள்ளமைப்பு பற்றிய கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர் ஐசக் நியூட்டன் ஆவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்