சர் C.V. ராமன் (சந்திரசேகர வெங்கட் ராமன்)


தமிழ்நாடு திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராமன் மெட்ராஸ் அரசாங்க பாடசாலையில் கல்வி கற்றதுடன், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெளதிகவியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

சர் C.V. ராமன் 1930ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை பெற்றுக்கொண்டார். ஒளித்துறையில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டமைக்காக பேராசிரியர் ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரின் கண்டுபிடிப்பானது “ராமன் விளைவு" என அழைக்கப்படுகின்றது.

1929ம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘நைட் ஹீட்’ என்ற பட்டம், இங்கிலாந்து அரசியால் ‘சர்’ பட்டமும்  அளிக்கப்பட்டது.

1954ம் ஆண்டில் ‘பாரத ரத்னா’ விருது,  1957ம் ஆண்டில் லெனின் அமைதிப்பரிசும் பெற்றார்.

1947 ஆம் ஆண்டில், சர் சி.வி. ராமன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,  பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.

நோபல் பரிசினை பெற்றுக்கொண்ட முதல் தமிழர் என்ற பெருமை சர் C.V. ராமன் அவர்களைச் சாரும்.

ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட பிப்ரவரி 28ம் தேதியைத்தான் நாம்  `தேசிய அறிவியல் தினம்’ என கொண்டாடி வருகிறோம்.

சர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்