வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திர மரபினர்கள்


வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்கள் பகுதிகள் :

அவந்தி-பிரதிகாரர்கள்
வங்காளம்-பாலர்கள் பிறகு சேனர்கள் ஆட்சி செய்தனர்
அஜ்மீர், டெல்லி-சௌகான்கள்
கனோஜ்-ரத்தோர்கள்
மோவார்-சிசோதியர்கள் (அ) குகிலர்கள்
பந்தல்கண்ட்-சந்தேலர்கள்
மாளவம்-பரமாரர்கள்
குஜராத்-சோலங்கிகள்

பிரதிகாரர்கள் :
பிரதிகாரர்கள் கூர்ஜர மரபினர்
பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர்
பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் மிகர போசர்
பிரதிகாரர்களின் கடைசி மன்னர் இராஜ்யபாலா

பாலர்கள் :
பாலர் மரபை தோற்றுவித்தவர் கோபாலர்
கோபாலருக்கு பின் அவரது மகன் தருமபாலர் மன்னரானார்
தருமபாலர் விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவினார். நாளந்தா பல்கலைக்கழகத்தை புதுப்பித்தார்.
கடைசி மன்னர் கோவிந்தபாலர்

சௌகான் மன்னர்களில் மிக முக்கியமானவர் பிருத்திவிராஜ்சௌகான்
ரத்தோர்கள் மரபின் கடைசி மற்றும் புகழுடன் ஆட்சி செய்த மன்னர் ஜெயச்சந்திரன்
முகமது கோரியுடன் நடைபெற்ற சந்தவார் போரில் ரத்தோர் மரபின் மன்னர் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டார். (கி.பி.1194)

சந்தேலர்கள் :
பந்தல்கண்ட் பகுதி ஆட்சி செய்தவர்கள் சந்தேலர்கள்
சந்தேலர்களின் கடைசி மன்னர் பாரமால்.
சந்தேலர்களின் முக்கிய கோட்டை - கலிஞ்சார் கோட்டை
சந்தேலர்கள் கட்டிய முக்கிய ஆலயம் - கஜுராஹோவில் உள்ள கந்தர்ய மகாதேவர் ஆலயம்

சிசோதிய (அ) குகிலர்கள்:
சிசோதிய (அ) குகிலர்கள் மரபை தொடங்கியவர் - பாபாரவால்
சித்தூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
இவரது வழி வந்த இராணாரத்தன் சிங்கின் மனைவி இராணி பத்மினி ஆவார்.
இராணாரத்தன் சிங் ஆலாவூதீன் கில்ஜியால் போரில் கொல்லப்பட்டதை அறிந்த இராணி பத்மினி ஜவ்ஹர்  என்ற வழக்கத்தின்படி தீயில் குதித்து இறந்தார்.

பரமாரர்கள் :
மாளவம் பகுதியை ஆண்டர்கள் பரமாரர்கள். (தலைநகரம் தாரா)
பரமாரர்கள் புகழ்மிக்க அரசர் இராஜாபோஜ்
இவர் போபால் நகரின் அருகில் 250 சதுரமைல் அளவில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
தாராவில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார்.
அலாவூதின் கில்ஜியின் படையெடுப்பால் பரமாரர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்