ஐந்தாண்டு திட்டங்களும், திட்டமிடுதலும்

ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா
தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக எட்டு முன்னணித் தொழிலதிபர்களால் இந்தியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இது பம்பாய் திட்டம் எனப்பட்டது.

பொருளாதார திட்டமிடுதலை பற்றி கூறிய முதல் அறிஞர் விஸ்வேஸ்வரய்யா

இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் விஸ்வேஸ்வரய்யா (1934)

ஸ்ரீமன் நாராயணன் - காந்தியத் திட்டம்
எம்.என்.ராய்  - மக்கள் திட்டம்
விஸ்வேஸ்வரய்யாவின் திட்டம்
ஆகியன உருவாக்கப்பட்டாலும் இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை

முதல் திட்டக்குழு 1950 மார்ச் 15ல் அமைக்கப்பட்டது.
நாட்டின் பிரதமர் இதன் தலைவர் ஆவார்.
திட்டக்குழுவின் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு
ஐந்தாண்டு திட்டங்களின் மீது இறுதியாக அங்கீகாரம் கொடுக்கும் அமைப்பு தேசிய வளர்ச்சிக்குழு
தேசிய வளர்ச்சிக்குழு நிறுவப்பட்ட நாள் 15.8.1952
தேசிய வளர்ச்சிக்குழுவின் தலைவர் பிரதம மந்திரி
ஐந்தாண்டுத் திட்டங்கள்

கருத்துரையிடுக

1 கருத்துகள்