உயிரினங்களின் அமைப்பு நிலைகள் | விலங்கு செல்

செல்

  • செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
  • செல்கள் பொதுவாக ‘உயிரினங்களின் கட்டுமானக் கற்கள்’ எனப்படுகின்றன.
  • செல்களைப் பற்றிய படிப்பு செல் உயிரியல் எனப்படும்.

  • செல்கள் சவ்வினால் சூழப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன.
  • இந்த சைட்டோபிளாசமானது புரதங்கள், உட்கரு அமிலங்கள் போன்ற பல உயிரியல் மூலக்கூறுகளைப் பெற்றுள்ளன.
  • செல்கள் அவற்றின் அளவு மற்றும் வடிவத்தைப் பொறுத்த வரை பெருமளவில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
  • செல்லின் புரோட்டோ பிளாசம் என்பது மையத்திலமைந்த கோள வடிவ உட்கருவையும், சைட்டோபிளாசத்தில் அமைந்த அகப்பிளாச வலை, மைட்டோகாண்டிரியா, கோல்கை உடல்கள், சென்ட்ரியோல்கள், ரிபோசோம்கள் போன்ற பல செல் நுண்ணுறுப்புகளையும் உள்ளடக்கியது.
  • ஒவ்வொரு செல் நுண்ணுறுப்பும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.

    விலங்கு செல்
  • விலங்குகளில் செல்களின் அளவு மைக்ரான் ( μ ) என்ற அலகால் அளக்கப்படுகிறது. (1 செ.மீ = 10 மி.மீ, 1 மி. மீ = 1000 மைக்ரா ன்). 
  • செல்களின் சராசரி அளவு 0.5 முதல் 20 மைக்ரான் விட்டம் வரை வேறுபடுகிறது.
  • பாக்டீரியாவின் அளவு மிகச் சிறியதாக இருக்கும். (1 – 2 μm).
  • மனித உடலின் மிகச் சிறிய செல் இரத்த சிவப்பணுக்கள் (விட்டம் 7 μm) மற்றும் மிக நீண்ட செல் 90 – 100 செ.மீ வரை நீளம் கொண்ட நரம்பு செல் ஆகும்.
  • மனித அண்ட செல் 100μm அளவுடையது.
  • பல செல் விலங்குகளில் மிகப் பெரிய செல், நெருப்புக் கோழியின் முட்டை ஆகும். இது 170 மி.மீx130 மி.மீ அளவுடையது. இது இரத்த சிவப்பணுக்களை விட 25,000 மடங்கு பெரியது.
  • 0.0001 மி.மீ அளவுடைய மைக்கோ பிளாஸ்மாவே மிகச்சிறிய பாக்டீரியம் ஆகும்.

செல் வடிவம்
  • செல்கள் வெவ்வேறு வடிவம் கொண்டவை. பொதுவாக அவை , அவற்றின் பணியினைப் பொறுத்து வேறுபடுகின்றன.
  • சில செல்கள் முட்டை அல்லது உருண்டை வடிவம் கொண்டவை . வேறு சிலவோ நீளமானவை. சில செல்கள் நீளமாக, இரு முனைகளும் கூர்மையாக அமைந்து கதிர் வடிவம் கொண்டுள்ளன. நரம்பு செல்கள் போன்ற சில செல்கள் கிளைத்தவை.
  • அமீபா போன்ற செல்கள் வெளிப்புறத்தில் ஒழுங்கற்ற வடிவம் கொண்டு, குறிப்பிட்ட கால இடை வெளிகளில் தங்கள் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்