வானிலை மற்றும் கால நிலை

காற்று

  • கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர்.
  • செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.
  • காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும்.
  • காற்றால் உருவாக்கப்படும் சுழல் காற்று மற்றும் கடும் காற்றை உணரத்தான் முடியும் பார்க்க முடியாது.
  • காற்று எத்திசையிலிருந்து வீசுகிறதோ அதே பெயரில் அழைக்கப்படுகிறது. எ.கா. தென் மேற்குப் பகுதியிலிருந்து வீசும் காற்றிற்கு தென் மேற்குப் பருவக்காற்று என்று பெயர்.

  • காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
    1. கோள் காற்றுகள் அல்லது நிரந்தர காற்றுகள்  (Planetary Winds)
    2. பருவக் காற்றுகள் (Seasonal Winds)
    3. தலக் காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் (Local winds)

    கோள் காற்றுகள்
    ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.
    எ.கா. வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.

    பருவக்காலக் காற்று
    பருவக்காலக் காற்று என்பது பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.
    தலக்காற்றுகள்
    தலக்காற்றுகள் அல்லது பிரதேசக் காற்றுகள் என்பது ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும்.
    எ.கா. நிலக்காற்று, கடல் காற்று.

கருத்துரையிடுக

0 கருத்துகள்