ந.பிச்சமூர்த்தி

புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.


பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே, அவர் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

புதுக்கவிதையை இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.

ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.

ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராகவும் இருந்தார். இவர் புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.


இவரின் முதல் சிறுகதை - "ஸயன்ஸுக்கு பலி" என்பதாகும். 1932 இல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார்.

பிக்ஷு, ரேவதி ஆகிய புனைபெயர்களில் படைப்புகளை எழுதினார்.

தமிழில் புதுக்கவிதை

கருத்துரையிடுக

0 கருத்துகள்