புதுவை மின் துறையில் இளநிலை பொறியாளர் பணி

புதுவை மின் துறையில் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
புதுவை மின் துறையில் ஒப்பந்த அடிப்படையிலான இளநிலைப் பொறியாளர் பணிகளுக்கு 2021 ஜனவரி 4 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி மின் துறைக் கண்காணிப்புப் பொறியாளர் முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை அரசின் மின் துறையில் 42 இளநிலைப் பொறியாளர் பதவிகள், 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. இந்தப் பதவிக்கான மாத ஊதியம் ரூ.33,000.

கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பட்டயப்படிப்பு. அதே பிரிவில் பட்டயப்படிப்பு. விண்ணப்பதாரர் 3 ஆண்டுகள் மின் உற்பத்தி, விநியோகப் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும். தளர்த்தப்பட்ட வயது வரம்பு, அரசின் விதிமுறைகள்படி அமல்படுத்தப்படும். புதுவையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. நிறைவு செய்த விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாகவே வருகிற 2021 ஜனவரி 4 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்