இந்தியத் தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கைத் துறை தலைவர்

இந்தியத் தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கைத் துறை தலைவர்
(Comptroller and Auditor General of India)

(Article 148 - 151)

  • இந்தியத் தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர் குடியரசுத் தலைவர் ஆவார்.

  • பதவிப் பிரமாணம் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் எடுக்க வேண்டும்.
  • இவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்குள்ளான நடைமுறைகளின்படி நீக்க வேண்டும்.
  • ஊதியம் மற்றும் பணிக்கான பிற நிலைகளை நாடாளுமன்றம் நியமிக்கும்.
  • பதவிக் காலத்தில் இவரது ஊதியம் மற்றும் பிற உரிமைகளை குறைக்க முடியாது.

  • இவரது ஊதியம் இரண்டாவது அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பணிக்கால ஓய்விற்குப் பிறகு மத்திய அல்லது மாநில அரசுகளின் கீழ்
  • எந்தப் பதவியையும் வகிக்க முடியாது.
  • இவரின் நிர்வாகச் செலவுகள் மற்றும் அலுவலகம் தொடர்பான அனைத்தும் இந்தியத் திரட்டு நிதியிலிருந்து அளிக்கப்படும். (இது ஓட்டெடுப்பிற்கு உட்படாது)


கடமைகள் மற்றும் அதிகாரங்கள்

  • ஒரு கணக்காளர் என்ற முறையில் இவர் இந்தியத் திரட்டு நிதியிலிருந்து எடுக்கப்படும் அனைத்து தொகைகளின் கட்டுப்பாட்டினை வைத்திருக்கிறார்.
  • ஒரு தணிக்கையாளர் (Auditor) என்ற முறையில் மத்திய மற்றும் மாநில அரசால் செலவழிக்கப்படும் எல்லா தொகைகளையும் தணிக்கை செய்கின்றார்.
  • இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பணியாளர் நிலைப்பாடுகள் மற்றும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் ஆகியவற்றை இவரிடம் ஆலோசித்த பிறகு குடியரசுத் தலைவர் விதிகள் வகுப்பார்.

  • மத்திய மற்றும் மாநிலங்களின் கணக்குகள் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிவுரையின் பேரில் குடியரசுத் தலைவர் வகுத்துக் கொடுக்கும் படிவத்தில் வைக்க வேண்டும். (சரத்து - 150)
  • மத்திய அரசின் கணக்கு மற்றும் தணிக்கை தொடர்பான அறிக்கைகளைக் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் நாடாளுமன்றத்தின் அவைகளில் முன்வைப்பார். (சரத்து - 151)
  • மாநிலத்தின் கணக்குகளை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் அதை சட்டமன்ற அவைகளில் முன் வைப்பார். (சரத்து - 151)

கருத்துரையிடுக

0 கருத்துகள்