சி.ஏ.ஜி.-இல் 10,811 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு

CAG காலி பணியிடங்கள் 2021-2022 அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பல்வேறு மாநிலங்களில் 10,811 காலி பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தணிக்கையாளர், கணக்காளர் பதவிகளுக்கு இதன் மூலம் விண்ணப்பிக்கலாம். cag.gov.in என்கிற இணையதளம் மூலம் விண்ணப்ப வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சி.ஏ.ஜி 2021 காலி பணியிடங்களுக்கு cag.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 19 பிப்ரவரி 2021 ஆகும். இளநிலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என சிஏஜி வேலைவாய்ப்பு 2021 ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப காலி பணியிடங்கள் மாநில வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட மாநில மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

வயது வரம்பு:
18 வயது முடிந்தவர்கள் 27 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசின் வயது சலுகைகள் வரம்பு சலுகைகள் பின்பற்றப்படும்.

சம்பள விகிதம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சிஏஜி சம்பள விகிதங்கள் பொருந்தும். லெவல் 5 சம்பள விகிதங்கள் பின்பற்றப்படும் (ரூ.29200-92300)

தேர்வு முறை: நேரடி நியமனம், பணி உயர்வு காலி பணியிடங்களுக்கு ஏற்ப பல்வேறு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் சிஏஜி இணையதளத்தில் பிடிஎஃப் வடிவில் கிடைக்கிறது.

விண்ணப்பதாரர்கள் CAG இணையதளத்துக்குச் சென்று, விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்