Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள் | TNPSC & PG TRB Tamil Study Materials

  • இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை
  • பெற்றோர் : வெங்கடராமன் - அம்மணியம்மாள்

  • பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே)
  • வாழ்நாள் : 19.10.1888 முதல் 24.8.1972 வரை (84வயது)
  • சிறந்த ஓவியர்
    முதன்முதலாக வரைந்த படம் இராமகிருஷ்ண பரமஹம்சர்
    புகைப்படம் போல் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற கவிஞர்
  • ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை தில்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912 ஆல் தில்லிக்குப் பயணமானார், ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் அவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

  • பாரதியாரை முதன்முதலில் சந்தித்த இடம் காரைக்குடி.
  • பாரதியாரிடம்  நாமக்கல் கவிஞர் பாடிக்காட்டிய பாடல் “தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்,,,”

    இயற்றிய நூல்கள்:
     
  • தமிழன் இதயம். சங்கொலி. தமிழ்த்தேர் கவிதாஞ்சலி. பிரார்த்தனை. தாயார் கொடுத்ததனம். தேமதுரத்தமிழோசை - கவிதை நூல்கள்
  • அவனும் அவளும் - காப்பியம் (கதைப்பாடல்)

    மலைக்கள்ளன் - மர்ம நாவல் (எம்,ஜி,ராமச்சந்திரன்-பானுமதி நடிக்க கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது)
    இலக்கிய இன்பம் - கட்டுரை
    என் கதை - தன் வரலாற்று நூல்
    (என் சரிதம் - உ.வே.சா. அவர்களின் தன் வரலாற்று நூல்)
    லோகமித்திரன் - கோவிந்தராச ஐயங்காருடன் இணைந்து நடத்திய இதழ்

  • புகழ்பெற்ற மேற்கோள்கள்:
    “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”

    “தமிழன் என்றோர் இனமுண்டு
    தனியே அவற்கொரு குணமுண்டு
    அமிழ்தம் அவனுடை மொழியாகும்
    அன்பே அவனுடை வழியாகும்”

    “பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
    பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”

    “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”

    “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”

    “காந்தியை மறக்காதே - என்றும்
    சாந்தியை இழக்காதே”

    தமிழ்த்தாய் வாழ்த்து:
    “தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
    தரணிக்கே ஓரணி செய்வோமே”

  • இயற்றிய பிற நூல்கள்:
    காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
    நாமக்கல் கவிஞர் பாடல்கள்
    திருக்குறளும் பரிமேலழகரும்
    திருவள்ளுவர் திடுக்கிடுவார்
    திருக்குறள் புது உரை
    கம்பனும் வால்மீகியும்
    கம்பன் கவிதை இன்பக் குவியல்
    என்கதை (சுயசரிதம்)
    மாமன் மகள் (நாடகம்)
    அரவணை சுந்தரம் (நாடகம்)

  • நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ்மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன.
    சிறப்பும் புகழுரையும்: 
  • நாமக்கல் கவிஞர். காந்தியக்கவிஞர் என போற்றப்பட்டார்.
  • மத்திய அரசு 1971இல் 'பத்மபூஷன்' விருதளித்து பாராட்டியது.
  • தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்
  • 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி