ஓசோன் படலம் சிதைவடைதல்


ஓசோன் படலம் பாதிப்பு 

வளிமண்டலத்திலுள்ள ஸ்ராட்டோஸ்பியரில் காணப்படும் ஓசோன் படலம் சூரியனிலிருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கிற புற ஊதாக் கதிர்களை வடிகட்டி உயிரிகளுக்குத் தீங்கு ஏற்படாவண்ணம் தடுக்கின்றது.

ஓசோன் உருவாக்கப்படும் அளவும், சிதைக்கப்படும் அளவும் சமமாக இருப்பதால் வான்வெளியில் ஓசோனின் மொத்த அளவு நிலையாக இருக்கும். தவறுதலாக மனிதனின் தற்கால செயல்பாடுகள் ஓசோன் படலத்தை மெல்லியதாக்கி உள்ளது (ஓசோன் பொத்தல்).  ஸ்ராட்டோஸ்பியரில் ஓசோன் அளவு குறைவதை ஓசோன் படல சிதைவு எனக் கூறுகிறோம். 

ஓசோன் துளை என்பது ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைந்து காணப்படும் நிலை  ஆகும்.  உண்மையில் இது துளை இல்லை.

ஓசோன் படல சீர்கேடிற்கான காரணங்கள்
  • வாயு மண்டலத்தில் உருவாகும் குளோரின் மற்றும் புரோமின் கூட்டுப் பொருட்களால்தான் இந்த ஓசோன் பொத்தல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • பொதுவான ஓசோன் குறைப்பு பொருட்களான குளோரோ புளுரோ கார்பன்கள், மீதைல் புரோமைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற பொருட்கள் குளிர்சாதனப்பெட்டிகள், குளிரூட்டிகள். நுரை பொருட்கள், தொழிற்சாலை கரைப்பான்கள் ஆகியவற்றிலிருந்து அதிக அளவு வெளியேற்றப்படுகின்றன. இதுவே ஓசோன் பொத்தலுக்குக் காரணமாகும்.

ஓசோன் படலம் சிதைவடைதலால் ஏற்படும் விளைவுகள்

  • மனிதனுக்கு தோல் நிறமி புற்றுநோய்கள், கண்புரை நோய் போன்றவை ஏற்படுகிறது.
  • புவியில் உள்ள அனைத்து  தாவரங்களிலும்  பச்சையங்கள் பாதிக்கப்பட்டு  விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும்.
  • நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும் இதனால் புவியில் உணவு சங்கிலி பாதிக்கப்படும்.

ஓசோன் படலத்தில் ஏற்படும் இழப்பை தடுக்கும்  முறைகள்:
  • ஓசோன் படல இழப்பிற்குக் காரணமாய் இருக்கும், பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் வாயுமண்டலத்தில் வெளியேற்றம் ஆகியவை குறைக்கப்பட வேண்டும்.
  • இவ்வேதிப் பொருட்களை மறு சுழற்சியில் ஈடுபடுத்த வேண்டும். சூரியக் கதிர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
  • மிக முக்கியமாக புவியில் அதிகமான மரங்களை நட்டு வளர்பதன் மூலம் ஓசோன் படல இழப்பை குறைக்கலாம். 
ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனை பாதுகாக்க  ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக கொண்டாடுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்