தேசியச் சின்னங்கள்

இந்திய தேசிய சின்னங்கள் (ஒருவரி தகவல்கள்)


இந்திய தேசிய சின்னங்கள்
(6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ளது உள்ளபடி)


தேசியச் சின்னங்கள் (6ஆம் வகுப்பு சமூக அறிவியல்
பாடப் புத்தகத்தில் உள்ளது உள்ளபடி) பதிவிறக்கம் செய்ய


தேசியக் கொடி
  • மூவண்ணக்கொடி நமது தேசியக் கொடியாகும். 
  • மூன்று வண்ணங்களும் சம அளவில் கிடைமட்டமாக அமைந்துள்ளன. மேல்பகுதியில் உள்ள காவி நிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. கீழ்ப்பகுதியில் உள்ள பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது. இடையில் உள்ள வெள்ளைநிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. 
  • நடுவில்கருநீலநிறத்தில் அமைந்துள்ள அசோகச் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது. 
  • தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2
  • இந்திய தேசியக் உங்களுக்குக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார். 
  • விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம் ) நெய்யப்பட்டது. 
  • இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார். 
  • இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்