Featured post
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram
இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் | Forest Research Institute
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வன ஆய்வு நிறுவனம் (இந்தியா) (Forest Research Institute) வனவியல் ஆய்வு மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சில் அமைப்பினைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் வனவியல் ஆய்வில் இத்துறையில் செயல்பட்டு வருகின்ற முதன்மையான பயிலகமாகும்.
இது உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டில், இது பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
வன ஆராய்ச்சி நிறுவனம் தம் வளாகத்தில் இந்திய வன சேவைக்கு (IFS) தேர்ந்தெடுக்கப்படும் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கும் ஊழியர் கல்லூரியான இந்திரா காந்தி தேசிய வன அகாடமியை (ஐ.ஜி.என்.எஃப்.ஏ) ஏற்று நடத்துகிறது.
இந்நிறுவனம் 1878 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இம்பீரியல் வனப்பள்ளியாக டீட்ரிச் பிராண்டிஸ் என்பவரால் நிறுவப்பட்டது. 1906 ஆம் ஆண்டில், இது பிரிட்டிஷ் இம்பீரியல் வனவியல் சேவையின் கீழ் இம்பீரியல் வன ஆராய்ச்சி நிறுவனமாக மீண்டும் நிறுவப்பட்டது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக