ம.பொ.சி.

'ம.பொ.சி. ' என்று மதிப்புடன் வழங்கப்படும் ம.பொ. சிவஞானம் சென்னை 'சால்வன் குப்பம் பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில் 26.6.1906 இல் பிறந்தவர்.

தந்தை பொன்னுசாமி 'கள்' இறக்கும் தொழிலாளி.

இரண்டாம் வகுப்புக்கு மேல் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத ம.பொ.சி. பல வேலைகளுக்குச் சென்றார்.

அச்சுக் கோக்கும் பணிதான் அவரை ஓர் அரசியல் தலைவராக வளர்த்தெடுக்க அடித்தளமிட்டது.

ம.பொ.சி.-யின் அரசியல் வாழ்க்கை 17 வயதில் தொடங்கியது.

1923 பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாகக் களமிறங்கினார்.

1928 சைமன் கமிஷன் எதிர்ப்புப் போராட்டம், 1930 சென்னை உப்பு சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்றார்.
1928 முதல் 1947 வரை ஆறு முறை சிறை சென்றுள்ளார்.

அமராவதி சிறைச்சாலையில் தமிழ் இலக்கியம் கற்கத் தொடங்கினார்.

புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களை ஆசிரியர் உதவியின்றி சிறையிலேயே கற்றுத் தேர்ந்தார்.

1934-இல் காந்தியடிகள் தமிழகம் வந்தபோது 'வடசென்னை ஹரிஜன சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர்' என்ற முறையில் கூட்டத்தில் காந்தியடிகளுக்குத் தமிழில் வரவேற்புரை வாசித்தளித்தார்.

ம.பொ.சி.-யின் முதல் நூல் 'கப்பலோட்டிய தமிழன்' 1944 இல் வெளிவந்தது வ.உ.சி.க்கு 'கப்பலோட்டிய தமிழன்' என்ற சிறப்புப் பெயரை வழக்கத்துக்குக் கொண்டு வந்தவரே ம.பொ.சி.தான்.

விடுதலைப் போரில் தமிழகம், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, சுதந்திரப் போர்க்களம், தமிழர் கண்ட காந்தி, காந்தியடிகளும் ஆங்கிலமும், காந்தியடிகளும் சோஷலிசமும், காந்தியடிகளை சந்தித்தேன் உள்ளிட்ட சில நூல்கள் விடுதலைப் போராட்டத்தையும் காந்தியடிகளையும் மையப்படுத்தியவை.

மாநில சுயாட்சி, தமிழக எல்லைப் போராட்டம், 'தமிழ்நாடு' பெயர் வைத்தல், தாய் மொழிக்கு முன்னுரிமை என்று பல தளங்களில் தீவிர இயக்கங்களைத் தொடர்ந்து நடத்தியவர்.

ம.பொ.சி.  நடத்திய இதழ் செங்கோல்.

தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை 1946-இல் நிறுவினார்.

சட்டப்பேரவை உறுப்பினர், சட்ட மேலவைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தவர்.

ம.பொ.சியின் சுயசரிதை நூல் 'எனது போராட்டம்'

3-10-1995-இல் அவரது 89வது வயதில் மறைந்தார்.
சிற்றகல் ஒளி (தன்வரலாறு) - ம.பொ.சிவஞானம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்