நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன்

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் 05-12-2021 அன்று காலமானார். அவரது வயது 98

டாக்டர் சாரதா மேனன் நாட்டிலேயே முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்., மற்றும் எம்டி., படிப்பை முடித்தார்.

பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்றார். சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 1961ம் ஆண்டு கண்காணிப்பாளராக சேர்ந்த அவர், 16 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

பணிகள்

நோயாளிகளுக்கு வருடந்தோறும் விளையாட்டு தினம் நடத்தியதோடு, மனநோயாளிகள் செய்யும் கைவினைப் பொருட்களை கண்காட்சியில் வைத்து, அதன்மூலம் மருத்துவமனைக்கு நிதி திரட்டி தந்தவர்.

பணி ஓய்வுக்கு பிறகு, மனநோயாளிகளின் நல்வாழ்விற்காக 1984ம் ஆண்டு "ஸ்கார்ப்" என்ற தொண்டு நிறுவனத்தை டாக்டர் சாரதா மேனன் துவக்கி, மனநோயாளிகளுக்கு தற்காலிக தங்கும் இடவசதி, மேம்படுத்தப்பட்ட மனநல சிகிச்சை முறைகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி அளித்து வந்தார்

விருதுகள் 2016ம் ஆண்டு அவரது சிறந்த சமூக சேவையினை பாராட்டி அவ்வையார் விருதுக்கான தங்கப்பதக்கத்தினை அன்றைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

பத்ம பூஷண் விருதையும் பெற்றவர் சாரதா மேனன்.

வயது மூப்பு காரணமாக 05/12/2021 இரவு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்