ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாடு

 
TNPSC Group II, IIA, Group IV, VAO Exams Botany Study Material

1.செயற்கை முறை வகைப்பாட்டினை நிறுவியவர் கரோலஸ் லின்னேயஸ்.
2.செயற்கை முறை வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு எனப்படும்.
3.இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் காஸ்பர்டு பாஹின்.
4.பெந்தம் ஹீக்கர் வெளியிட்ட நூல் ஜெனிரா பிளாண்டாரம்.
5. இணையாத அல்லிகளையுடைய தாவரங்கள் பாலிபெட்டலே என அழைக்கப்படுகிறது.6.பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 202.
7.சூலக கீழ் மலர் கொண்ட தாவர குடும்பங்களின் வரிசை இன்பெரே.
8. யூனிசெக்ஸ்வேல்ஸ் என்ற வரிசையில் உள்ள தாவரக்குடும்பம் யூபோர்பியேசி.
9.தெஸ்பிஸியா பாபுல்னியா இடம் பெற்றுள்ள தாவரக்குடும்பம் மால்வேசி.
10.மால்வேசி இடம் பெற்றள்ள வரிசை தலாமிஃபுளோரே.
11. ஓரறை உடைய மகரந்தப்பை காணப்படும் தாவரக் குடும்பம் மால்வேசி.
12. ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி சூலக அறை வெடிகனி.
13.சொலானேசி இடம் பெற்றுள்ள துறை பாலிமோனியேல்ஸ்.
14.நடுநரம்பு மற்றும் பக்க நரம்பகளின் மீது மஞ்சள் நிறமுட்கள் காணப்படும் தாவரம் சொலானம் சாந்தோகார்ப்பம்.
15. பொங்கமியா கிளாபரா ஒரு மரம்.
16.ஆஸ்கினோமினி ஆஸ்பிரா ஒரு நீர்த்தாவரம்.
17. ஃபேபேசி குடும்பத்தாவரங்களின் கனி லெக்யூம்.
18. ஃபேபேசி குடும்பத்தில் காணப்படும் சூல்ஒட்டு முறை விளிம்பு சூல்ஒட்டு முறை.
19.ரூபியேசி இடம் பெற்றுள்ள வரிசை இன்பெரே.
20.இக்ஸோரா காக்சினியாவின் இலையமைவு குறுக்குமறுக்கு இலையமைவு.
21. இக்ஸோரா காக்ஸினியா மகரந்ததாள் அல்லி ஒட்டியவை.
22. சின்கோனா அஃபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து குயினைன்.
23.வெர்னோனியா ஆர்போரியா ஒரு மரம்.

24. சிரமஞ்சரி தனிமலராக குறுக்கமடைந்து காணப்படுவது எக்கினாப்ஸ்.
25.ஒரு தரப்பட்ட சிரமஞ்சரி காணப்படும் தாவரம் லானியா.
26.ஆஸ்ட்ரேசி குடும்பத் தாவரங்களின் கனிகள் சிப்செல்லா.

கருத்துரையிடுக

0 கருத்துகள்