Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

TNPSC, TET Exams | பொதுத்தமிழ்- சொல்லும் பொருளும்

6th - 12th New Text Books சொல்லும் பொருளும்

TNPSC General Tamil


  • ஆழிப்பெருக்கு - கடல்கோள்
  • மேதினி - உலகம்
  • ஊழி - நீண்டதொரு காலப்பகுதி 
  • உள்ளப்பூட்டு  - அறிய விரும்பாமை 
  • நிருமித்த - உருவாக்கிய
  • திங்கள் - நிலவு
  • கொங்கு - மகரந்தம்
  • அலர் - மலர்தல்
  • திகிரி  - ஆணைச்சக்கரம் 
  • பொற்கோட்டு -  பொன்மயமானசிகரத்தில்
  • மேரு - இமயமலை
  • நாமநீர் -  அச்சம் தரும் கடல்
  • அளி -  கருணை
  • காணி - நில அளவை குறிக்கும்சொல் 
  • சித்தம் - உள்ளம்
    Click & Download Pdf
  • மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள் 
  • மாசற -  குறை இல்லாமல்
  • சீர்தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
  • நெறி - வழி
  • ஒப்புரவு - பிறருக்கு உதவி செய்தல்
  • நட்டல் - நட்புக் கொள்ளுதல்
  • பார் - உலகம்
  • நந்தவனம் - பூஞ்சோலை
  • பண் - இசை
  • இழைத்து - செய்து
  • மல்லெடுத்த - வலிமை பெற்ற
  • சமர் - போர்
  • மறம் - வீரம்
  • எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
  • அரிச்சுவடி - அகர வரிசை எழுத்துகள் 
  • தண்டருள் - குளிர்ந்த கருணை
  • கூர் - மிகுதி
  • செம்மையருக்கு - சான்றோர்க்கு 
  • ஏவல் - தொண்டு
  • நல்கும் - தரும்
  • கழனி - வயல்
  • பராபரமே - மேலான பொருளே
  • எய்தும் - கிடைக்கும்
  • கும்பி,பண்டி - வயிறு
  • பூதலம் - பூமி
  • முகில் - மேகம்
  • உபகாரி - வள்ளல்
  • கொம்பு - கிளை
  • அதிமதுரம் - மிகுந்தசுவை
  • பரவசம் - மகிழ்ச்சி பெருக்கு
  • துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்
  • சிற்றில் - சிறு வீடு
  • கல் அளை - கற்குகை
  • யாண்டு - எங்கே
  • சூரன் - வீரன்
  • விஸ்தாரம் - பெரும்பரப்பு
  • வாரணம் - யானை
  • பரி - குதிரை
  • சிங்காரம் - அழகு
  • கமுகு - பாக்கு
  • மதலை - தூண்
  • ஞெகிழி - தீச்சுடர்
  • அழுவம் - கடல்
  • சென்னி - உச்சி
  • உரவுநீர் - பெருநீர்ப்பரப்பு
  • கரையும் - அழைக்கும்
  • உரு - அழகு
  • போழ - பிளக்க
  • வங்கூழ் - காற்று
  • நீகான் - நாவாய் ஓட்டுபவன்
  • வங்கம் - கப்பல்
  • எல் - பகல்
  • கோடு உயர் - கரை உயர்ந்த
  • மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
  • மீகாமன் - கப்பலோட்டி
  • எத்தனிக்கும் - முயலும்
  • வெற்பு - மலை
  • பரிதி - கதிரவன்
  • துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
  • பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
  • நெடி - நாற்றம்
  • வனப்பு - அழகு
  • மறித்தல் - தடுத்தல்
  • புகவா - உணவாக
  • மடமகள் - இளமகள்
  • நல்கினாள் - கொடுத்தாள்
  • முன்றில் - திண்ணை
  • குழி - நில அளவை பெயர்
  • மணி - முற்றிய நெல்
  • கழறுதல் - உதிர்தல்
  • சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணி
  • வெய்ய - வெப்பகதிர் வீசும்
  • சொல்மாலை - பாமாலை
  • சுடர் ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
  • தகளி - அகல் விளக்கு
  • நாரணன் - திருமால்
  • நிலன் - நிலம்
  • பைங்கூழ் - பசுமையான பயிர்
  • பேதம் - வேறுபாடு
  • தாரணி - உலகம்
  • வைப்பு - நிலப்பகுதி
  • சூல்கலி- சூழ்ந்துள்ளஅறியாமைஇருள்
  • வண்மொழி - வளமிக்க மொழி
  • இசை - புகழ்
  • தொல்லை - பழமை,துன்பம்
  • விசும்பு - வானம்
  • மயக்கம் - கலவை
  • வழாஅமை - தவறாமை
  • தழாஅல் - தழுவுதல்,பயன்படுத்துதல்
  • ஈரம் - இரக்கம்
  • முழவு - இசைக்கருவி
  • செஞ்சொல் - திருந்திய சொல்
  • நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
  • கெடிகலங்கி - மிக வருந்தி
  • சம்பிரமுடன் - முறையாக
  • சேகரம் - கூட்டம்
  • வின்னம் - சேதம்
  • வாகு - சரியாக
  • காலன் - எமன்
  • மெத்த - மிகவும்
  • தீர்வன - நீங்குபவை
  • உவசமம் - அடங்கி இருத்தல்
  • நிழல் இகழும் - ஒளி பொருந்திய
  • பேர்தற்கு - அகற்றுவதற்கு
  • திறத்தன - தன்மையுடையன
  • கூற்றவா - பிரிவுகளாக
  • பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே
  • ஓர்தல் - நல்லறிவு
  • மட்டு - அளவு
  • நித்தம் நித்தம் - நாள்தோறும்
  • சுண்ட - நன்கு
  • பேணுவையேல் - பாதுகாத்தல்
  • திட்டு முட்டு - தடுமாற்றம்
  • கலன் - அணிகலன்
  • முற்ற - ஒளிர
  • செருக்கு - அகம்பாவம்
  • கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை
  • மத வேழங்கள் - மத யானைகள்
  • முரலும் - முழங்கும்
  • பழவெய் - முதிர்ந்த மூங்கில்
  • அலர்ந்தவர் - வறியவர்
  • செறாஅமை - வெறுக்காமை
  • நோன்றல் - பொறுத்தல்
  • போற்றார் - பகைவர்
  • கிளை - உறவினர்
  • பேதையார் - அறிவற்றவர்
  • மறாஅமை - மறவாமை
  • பொறை - பொறுமை
  • வாரி - வருவாய்
  • எஞ்சாமை - குறைவின்றி
  • முட்டாது - தட்டுப்பாடின்றி
  • ஒட்டாது - வாட்டமின்றி
  • வைகுக - தங்குக
  • ஓதை - ஓசை
  • வெரீஇ - அஞ்சி
  • யாணர் - புதுவருவாய்
  • மறலி - காலன்
  • கரி - யானை
  • தூறு - புதர்
  • அருவர் - தமிழர்
  • உடன்றன - சினந்து எழுந்தன
  • வழிவர் - நழுவி ஓடுவர்
  • பிலம்,முழை - மலைக்குகை
  • மண்டுதல் - நெருங்குதல்
  • இறைஞ்சினர் - வணங்கினர்
  • மோகித்து - விரும்பி
  • நமன் - எமன்
  • நம்பர் - அடியார்
  • உய்ம்மின் - ஈடேறுங்கள்
  • ஈயில் - வழங்கினால்
  • பகராய் - தருவாய்
  • அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு
  • நிறை - மேன்மை
  • பொச்சாப்பு - சோர்வு
  • மையல் - விருப்பம்
  • ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்
  • அழுக்காறு - பொறாமை
  • மதம் - கொள்கை
  • இகல் - பகை
  • மன்னும் - நிலைப்பெற்ற
  • மூன்றினம் - துறை
  • திறமெல்லாம் - சிறப்பெல்லாம்
  • இராசசம் - போர்
  • தாமசம் - சோம்பல்
  • ஊனரசம் - குறையுடைய சுவை
  • கந்தம் - மணம்
  • மிசை - மேல்
  • விசனம் - கவலை
  • வாவி - பொய்கை
  • வளர்முதல் - நெற்பயிர்
  • தரளம் - முத்து
  • பணிலம் - சங்கு
  • கழை - கரும்பு
  • மாடு - பக்கம்
  • கோடு - குளக்கரை
  • மேதி - எருமை
  • துதைந்து எழும் - கலக்கி எழும்
  • சூடு - நெல் அரிக்கட்டு
  • சுரிவளை - சங்கு
  • வேரி - தேன்
  • பகடு - எருமைக்கடா
  • பாண்டில் - வட்டம்
  • சிமயம் - மலையுச்சி
  • நாளிகேரம் - நாரத்தை
  • கோளி - அரசமரம்
  • சாலம் - ஆச்சா மரம்
  • தமாலம் - பச்சிலை மரங்கள்
  • இரும்போந்து - பருத்த பனைமரம்
  • சந்து - சந்தனமரம்
  • காஞ்சி - ஆற்றுப்பூவரசு
  • யாக்கை - உடல்
  • புணரியோர் - தந்தவர்
  • புன்புலம் - புல்லிய நிலம்
  • தாட்கு - முயற்சி
  • சமயக் கணக்கர் - சமய தத்துவவாதிகள்
  • பாடை மாக்கள் - பல மொழிபேசும் மக்கள்
  • குழீஇ - ஒன்று கூடி
  • தோம் - குற்றம்
  • கோட்டி - மன்றம்
  • பொலம் - பொன்
  • வேதிகை - திண்ணை
  • தாமம் - மாலை
  • சதிர் - நடனம்
  • வசி - மழை
  • செற்றம் - சினம்
  • கலாம் - போர்
  • துருத்தி - ஆற்றிடைக்குறை
  • களர்நிலம் - உவர்நிலம்
  • நவிலல் - சொல்லல்
  • அணித்து - அருகில்
  • யாண்டும் - எப்பொழுதும்
  • நாறுவ - முளைப்ப
  • தாவா - கெடாதிருத்தல்
  • புரிசை - மதில்
  • அணங்கு - தெய்வம்
  • சில் காற்று - தென்றல்
  • புழை - சாளரம்
  • மாகால் - பெருங்காற்று
  • முந்நீர் - கடல்
  • பணை - முரசு
  • கயம் - நீர்நிலை
  • ஓவு - ஓவியம்
  • நியமம் - அங்காடி
  • மைவனம் - மலைநெல்
  • முருகியம் - குறிஞ்சிப்பறை
  • பூஞ்சினை - பூக்களை உடைய கிளை
  • சிறை - இறகு
  • சாந்தம் - சந்தனம்
  • பூவை - நாகணவாய்ப் பறவை
  • பொலம் - அழகு
  • முக்குழல் -கொன்றை,ஆம்பல்,மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்
  • பொலி - தானியக் குவியல்
  • உழை - ஒரு வகை மான்
  • வாய்வெரீஇ - சோர்வால் வாய் குழறுதல்
  • இனைந்து - துன்புறுதல்
  • உயங்குதல் - வருந்துதல்
  • படிக்குஉற - நிலத்தில் விழ
  • கோடு - கொம்பு, மலை
  • கல் - மலை
  • முருகு - தேன்,மனம்,அழகு
  • மல்லல் - வளம்
  • செறு - வயல்
  • கரிக்குருத்து - யானைத்தந்தம்
  • புரைதப - குற்றமின்றி
  • தும்பி - ஒருவகை வண்டு
  • துவரை - பவளம்
  • மதியம் - நிலவு
  • தெங்கு - தேங்காய்
  • வருக்கை - பலாப்பழம்
  • நெற்றி - உச்சி
  • மால்வரை - பெரிய மலை
  • மடுத்து - பாய்ந்து
  • கொழுநிதி - திரண்ட நிதி
  • மருப்பு - கொம்பு
  • வெறி - மணம்
  • செறி - சிறந்த
  • இரிய - ஓட
  • அடிசில் - சோறு
  • மடிவு - சோம்பல்
  • கொடியன்னார் - மகளிர்
  • நற்றவம் - பெந்தவம்
  • வட்டம் - எல்லை
  • வெற்றம் - வெற்றி
  • அள்ளல் - சேறு
  • பழனம் - நீர் மிக்க வயல்
  • வெரீஇ - அஞ்சி
  • பார்ப்பு - குஞ்சு
  • நந்து - சங்கு
  • நசை - விருப்பம்
  • வெகுளி - சினம்
  • பிடி - பெண்யானை
  • வேழம் - ஆண்யானை
  • யா - ஒரு வகை பாலை நில மரம்
  • பொளிக்கும் - உரிக்கும்
  • ஆறு - வழி
  • துய்ப்பது - கற்பது, தருதல்
  • மேவலால் - பொருந்துதல், பெறுதல்
  • நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
  • நேமி - வலம்புரிச்சங்கு
  • கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
  • நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
  • விரிச்சி - நற்சொல்
  • சுவல் - தோள்
  • அருகுற - அருகில்
  • முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்            
  • அசைஇ - இளைப்பாறி
  • அல்கி - தங்கி
  • கடும்பு - சுற்றம்
  • ஆரி - அருமை
  • வயிரியம் - கூத்தர்
  • இறடி - தினை
  • நரலும் - ஒலிக்கும்
  • படுகர் - பள்ளம்
  • வேவை - வெந்தது
  • பொம்மல் - சோறு
  • ஊழி - யுகம்
  • மாயம் - விளையாட்டு
  • ஊழ் - முறை
  • தண்பெயல் - குளிர்ந்த மழை
  • ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
  • பீடு - சிறப்பு
  • ஈண்டி - செறிந்து திரண்டு
  • தார் - மாலை
  • முடி - தலை
  • முனிவு - சினம்
  • தமர் - உறவினர்
  • நீபவனம் - கடம்பவனம்
  • கவரி - சாமரை
  • அசும்பிய - ஒளிவீசுகிற
  • முச்சி - தலையுச்சிக் கொண்டை
  • சுண்ணம் - நறுமனப்பொடி
  • இளங்கூழ் - இளம்பயிர்
  • தயங்கி - அசைந்து
  • காய்ந்தேன் - வருந்தினேன்
  • ஓர்ந்து - நினைத்து
  • உவமணி - மணமலர்
  • படலை - மாலை
  • கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
  • காடுகர் - நெய்பவர் ( சாலியர்)
  • தூசு - பட்டு
  • துகிர் - பவளம்
  • வெறுக்கை - செல்வம்
  • நொடை - விலை
  • பாசவர் - வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் - எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர் - ஓவியர்
  • மண்ணீட்டாளர் - சிற்பி
  • கிழி - துணை
  • சேக்கை - படுக்கை
  • பிணந்து - கட்டி
  • வாய்ந்த - பயனுள்ள
  • புழை - துளை
  • தேம்ப - வாட
  • அசும்பு - நிலம்
  • உய்முறை - வாழும் வழி
  • கடிந்து - விலக்கி
  • துணர் - மலர்கள்
  • கிளி - சுகம்
  • விச்சை - கல்வி
  • வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
  • பால் - வகை
  • இயல்பு - பண்பு
  • மாடம் - மாளிகை
  • அமை - மூங்கில்
  • வட ஆரிநாடு - திருமலை
  • தென் ஆரிநாடு - குற்றாலம்
  • ஆரளி - மொய்க்கின்ற வண்டு
  • இந்துளம் - சங்கிலி
  • உளம் - உள்ளான் என்ற பறவை
  • சலச வாவி - தாமரைத் தடாகம்
  • தரளம் - முத்து
  • கா - சோலை
  • முகில் தொகை - மேகக் கூட்டம்
  • மஞ்ஞை - மயில்
  • கொண்டல் - கார்கால மேகம்
  • மண்டலம் - உலகம்
  • வாவித் தரங்கம் - குளத்தில் எழும் அலை
  • அளி உலாம் - வண்டு மொய்க்கின்ற
  • போது - மொட்டு
  • அலர்ந்து - மலர்ந்து
  • கவினி - அழகுற
  • ஜகம் - தோள்
  • வரை - மலை
  • வன்னம் - அழகு
  • கமுகாசலம் - கழுகு மலை
  • த்வஜஸ்தம்பம் - கொடிமரம்
  • சலராசி - கடலில் வாழும் உயிரிகள்
  • விலாசம் - அழகு
  • நூபுரம் - சிலம்பு
  • மாசுணம் - பாம்பு
  • இஞ்சி - மதில்
  • புயல் - மேகம்
  • கறங்கும் - சுழறும்
  • சிதவல் - தலைப்பாகை
  • தண்டு - ஊன்றுகோல்
  • தமியர் - தனித்தவர்
  • முனிதல் - வெறுத்தல்
  • துஞ்சல் - சோம்பல்
  • அயர்வு - சோர்வு
  • மாட்சி - பெருமை
  • நோன்மை - வலிமை
  • தாள் - முயற்சி
  • அரும்புதல் - பருத்தல்
  • இயைபு இல் - பொருத்தமற்றது
  • ஆக்கம் - உயிருடைத்து
  • மாழ்கி - தொட்டல் சுருங்கி எனும் தாவரம்
  • மாழ்குதல் - மயங்குதல்
  • சேதனை - அறிவு
  • கற்றிலை - அறியவில்லை
  • பெருந்தவத்தாய் - பெரிய தவமுடையவர்
  • வாய்த்துரை - பொருத்தமான உரை
  • வாமன் - அருகன்
  • தேறு - தெளிவாக
  • செலவு - வழி
  • பரிப்பு - இயக்கம்
  • துப்பு - வலிமை
  • கூம்பு  - பாய்மரம்
  • புகாஅர் - ஆற்றுமுகம்
  • தகாஅர் - தகுதியில்லார்
  • பல்தாரத்த - பல்வகைப்பட்ட பண்டம்
  • பிரசம் - தேன்
  • புடைத்தல் - கோல்கொண்டு ஓச்சுதல்
  • கொழுநன் குடி - கணவனுடைய வீடு
  • வறன் - வறுமை
  • கொழுஞ்சோறு - பெருஞ்செல்வம்
  • உள்ளாள் - நினையாள்
  • மதுகை - பெருமிதம்
  • இகக்கும் - நீக்கும்
  • இழுக்கு - குற்றம்
  • வினாயவை - கேட்டவை
  • வரை - மலை
  • கம்பலை - பேரொலி
  • புடவி - உலகம்
  • எய்துதல் - பெறுதல்
  • வாரணம் - யானை
  • பூரணம் - நிறைவு
  • நல்கல் - அளித்தல்
  • வதுவை - திருமணம்
  • கோன் - அரசன்
  • மறுவிலா - குற்றம் இல்லாத
  • துன்ன - நெருங்கிய
  • பொறிகள் - ஐம்புலன்
  • தெண்டிரை - தெள்ளிய நிலை
  • விண்டு - திறந்து
  • மண்டிய - நிறைந்த
  • காய்ந்த - சிறந்த
  • தீன் - மார்க்கம்
  • கொண்மூ - மேகம்
  • விசும்பு - வானம்
  • அரவம் - ஆரவாரம்
  • ஆயம் - சுற்றம்
  • தழலை, தட்டை - பறவைகளை ஓட்டும் கருவிகள்
  • கொத்து - பூமாலை
  • குழல் - கூந்தல்
  • நாங்கூழ் - மண்புழு
  • கோலத்து நாட்டார் - கலிங்க நாட்டார்
  • வரிசை - சன்மானம்
  • காயில் - வெகுண்டால்
  • அந்தம் - முடிவு
  • அயன் - பிரம்மன்
  • மால் - விஷ்ணு
  • ஆலாலம் - நஞ்சு
  • ஓதுக - சொல்க
  • முழக்கம் - ஓங்கி உரைத்தல்
  • கனிகள் - உலோகங்கள்
  • மணி - மாணிக்கம்
  • படிகம் - பளபளப்பான கல்
  • மீட்சி - விடுதலை
  • நவை - சுற்றம்
  • படி - உலகம்
  • பதி - நாடு
  • பிழைப்பு - வாழ்தல்
  • நிரையம் - நரகம்
  • ஒரீஇய - நோய் நீங்கிய
  • புரையோர் - சான்றோர்
  • யாணர் - புது வருவாய்
  • மருண்டெனன் - வியப்படைந்தேன்
  • மன்னுயிர் - நிலைப்பெற்றுள்ள உயிர்த்தொகுதி
  • தண்டா - ஓயாத
  • கடுந்துப்பு - மிகுவலிமை
  • ஏமம் - பாதுகாப்பு
  • ஒடியா - குறையா
  • நயந்து - விரும்பிய
  • கவனம் - வேகம்
  • துரகதம் - குதிரை
  • வென்றி - வெற்றி
  • விசயன் - அருச்சுனன்
  • நான்மறை - நான்கு வேதங்கள்
  • யாக்கை - உடல்
  • ஓவு இலாது - ஒன்றும் மிச்சமின்றி
  • எழிலிஏறு - பேரிடி
  • அங்கை - உள்ளங்கை
  • அவுணன் - அரக்கன்
  • மல்லல் - வளமை
  • தொடையல் - மாலை
  • சூரன மாமதலை - கதிரவன் மகன்
  • உற்பவம் - பிறவி
  • கடிநகர் - காவல் உடைய நகரம்
  • காண்டி - காண்க
  • பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தம்
  • ஆசு இலா - குற்றம் இலாத
  • தோட்டி - துறட்டி
  • அயம் - ஆடு,குதிரை
  • புக்கவிட்டு - போகவிட்டு
  • சீரிய தூளி - நுண்ணிய மணல்
  • சிறுகால் - வாய்க்கால்
  • பரல் - கல்
  • முந்நீர் மடு - கடலாகிய நீர்நிலை
  • அண்டயோனி - ஞாயிறு
  • சாடு - பாய்
  • ஈட்டியது - சேகரித்தது
  • எழிலி - மேகம்
  • பாடு - உழைப்பு
  • ஓவா - ஓயாத
  • வேதித்து - மாற்றி
  • புதுப்பெயல் - புதுமழை
  • ஆர்கவி - வெள்ளம்
  • கொடுங்கோல் - வளைந்த கோல்
  • புலம்பு - தனிமை
  • கண்ணி - தலையில் சூடும் மாலை
  • கவுள் - கன்னம்
  • மா - விலங்கு
  • அமலன் - இராமன்
  • இளவல் - தம்பி
  • நளிர்கடல் - குளிர்ந்தகடல்
  • துன்பு - துன்பம்
  • உன்னேல் - எண்ணாதே
  • அனகன் - இராமன்
  • உவா - அமாவாசை
  • உடுபதி - சந்திரன்
  • செற்றார் - பகைவர்
  • கிளை - உறவினர்
  • வாயிலோயே - வாயில் காப்போனே
  • வள்ளியோர் - வள்ளல்கள்
  • வயங்குமொழி - விளங்கும் சொற்கள்
  • வித்தி - விதைத்து
  • உள்ளியது - நினைத்தது
  • உரன் - வலிமை
  • வறுந்தலை - வெறுமையான இடம்
  • காவினெம் - கட்டிக் கொள்ளுதல்
  • கலன் - யாழ்
  • கலப்பை - கருவிகளை வைக்கும் பை
  • மழு - கோடரி
  • மலிவிழா - விழாக்கள் நிறைந்த
  • மடநல்லார் - இளமை பொருந்திய
  • கலிவிழா - எழுச்சி தரும் விழா
  • பலிவிழா - திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
  • ஒலிவிழா - ஆரவார விழா
  • வேட்டம் - மீன் பிடித்தல்
  • கழி - உப்பங்கழி
  • செறு - வயல்
  • கொள்ளை - விலை
  • என்றூழ் - சூரியனின் வெப்பம்
  • விடர் - மழை வெடிப்பு
  • கதழ் - விரைவு
  • உமணர் - உப்பு வணிகர்
  • எல்வளை - ஒளிரும் வளையல்
  • தெளிப்பு - ஒலிப்ப
  • விளிஅறி - குரல் கேட்ட
  • ஞமலி - நாய்
  • வெரீஇய - அஞ்சிய
  • மதர்கயல் - அழகிய மீன்
  • புனவன் - கானவன்
  • அள்ளல் - சேறு
  • பகடு - எருது
  • நகை - சிரிப்பு
  • இளிவரல் - சிறுமை
  • மருட்கை - வியப்பு
  • பெருமிதம் - பெருமை
  • உவகை - மகிழ்ச்சி
  • காய்நெல் - விளைந்த நெல்
  • மா - ஒரு நில அளவு (1/3 ஏக்கர்)
  • தமித்து - தனித்து
  • புக்கு - புகுந்து
  • யாத்து - சேர்த்து
  • நந்தும் - தழைக்கும்
  • வரிசை - முறைமை
  • கல் - ஒலிக்குறிப்பு
  • பரிவு - அன்பு
  • தப - கெட
  • பிண்டம் - வரி
  • நச்சின் - விரும்பினால்
  • உன்னலிர் - எண்ணாதீர்கள்
  • பிணித்தமை - கட்டியமை
  • நீச - இழிந்த
  • நேசம் - அன்பு
  • வல்லியதை - உறுதியை
  • ஓர்மின் - ஆராய்ந்து பாருங்கள்
  • பாதகர் - கொடியவர்
  • குழுமி - ஒன்றுகூடி
  • பழுப்புரை - இகழ்ச்சியுரை
  • ஏதமில் - குற்றமில்லாத
  • ஊன்ற - அழுந்த
  • மாற்றம் - சொல்
  • நுவன்றிலர் - கூறவில்லை
  • வளமலை - வளமானமலை(மலைநாடு)
  • கவாஅன் - மலைப்பக்கம்
  • கலிங்கம் - ஆடை
  • சுரும்பு - வண்டு
  • நாகம் - சுரபுன்னை,நாகப்பாம்பு
  • பிறங்கு - விளங்கும்
  • பறம்பு - பறம்பு மலை
  • கறங்கு - ஒலிக்கும்
  • வாலுளை - வெண்மையான தலையாட்டம்
  • மருள - வியக்க
  • நிழல் - ஒளி வீசும்
  • நீலம் - நீல மணி
  • ஆலமர் செல்வன் - சிவபெருமான்
  • அமர்ந்தணன் - விரும்பினன்
  • சாவம் - வில்
  • மால்வரை - பெரியமலை
  • கரவாது - மறைக்காது
  • துஞ்சு - தங்கு
  • நளிசினை -செறிந்த கிளை (பெரியகிளை)
  • போது - மலர்
  • கஞலிய - நெருங்கிய
  • நாகு - இளமை
  • குறும்பொறை - சிறு குன்று
  • கோடியர் - கூத்தர்
  • மலைதல் - போரிடல்
  • உறழ் - செறிவு
  • நுகம் - பாரம்
  • வித்யாரம்பம் - கல்வி தொடக்கம்
  • வித்தியாப்பியாசம் - கல்வி பயிற்சி
  • உபாத்தியாயர் - ஆசிரியர்
  • கீழ்வாயிலக்கம் - பின்ன எண்ணின் கீழ்தொகை
  • மேல்வாயிலக்கம் - பின்ன எண்ணின் மேல்தொகை
  • குழிமாற்று - பெருக்கல் வாய்ப்பாடு
  • சீதாளபத்திரம் - தாழை மடல்
காட்டைக் குறிக்கும் வேறு சொற்கள் :
கா,கால்,கான்,கானகம்,கடறு,அடவி,அரண்,ஆரணீ,புரவு,பொற்றை, பொழில்,தில்லம்,அழுவம்,இயவு,பழவம்,முளிரி,வல்லை,விடர்,வியல்,            வனம்,முதை,மிளை,இறும்பு,சுரம்,பொச்சை,பொதி,முளி,அரில்,அறல்,            பதுக்கை,கணையம்.

கடலைக் குறிக்கும் வேறு சொற்கள்: 
அரி, அலை, அரலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆழி, ஈண்டுநீர்,  உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, தென்நீர், பெளவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்.

யானையைக் குறிக்கும் வேறு சொற்கள்  : 
கயம், களிறு, களபம்,கரி,கைம்மா, குஞ்சரம், வேழம், பிளிறு, மாதங்கம், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, வல்விலங்கு, அஞ்சனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி